சுய தீவிரவாதப்  போக்கை நாடிய இல்லப் பணிப்பெண்

இந்தோனீசியாவைச் சேர்ந்த இல்லப் பணிப்பெண் ஒருவர், வன்முறையைத் தூண்டக்கூடிய பதிவுகளைத் தமது கைபேசியில் அடிக்கடி பார்த்து வந்ததைக் கண்டறிந்த அவரது முதலாளி, அது குறித்து உள்நாட்டுப் பாது­காப்புத் துறையிடம் தெரியப்படுத்தி­யதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் அறிகிறது.
ஆயுதம் ஏந்திய வன்முறையை ஆதரித்தது கண்டுபிடிக்கப்பட்ட­தையடுத்து அவர்களது சொந்த நாட்டிற்கு அண்மையில் திருப்பி அனுப்பப்பட்ட ஐந்து இந்தோனீசிய பணிப்பெண்களில் அவரும் ஒருவர்.
சுய தீவிரவாதப் போக்கிற்கு ஆளாகும் இல்லப் பணிப்பெண்கள் தொடர்பிலான இதுபோன்ற சம்ப­வங்கள் குறித்து தாம் முன்னதாக கேள்விப்பட்டிருந்ததால், அந்தப் பணிப்பெண்ணின் நடவடிக்கை­களை அவரது முதலாளி கண்டறிய முடிந்ததாக உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
“தம்மிடம் ஓராண்டுகால­மாக பணிபுரிந்து வந்த அப்பணிப்­ பெண்ணின் நடத்தையில் மாற்றங்­கள் தென்பட்டதைக் கண்டறிந்த முதலாளி கவலையடைந்தார்.
“குறிப்பாக, வன்முறையைச் சித்திரிக்கும் காட்சிகளைத் தமது கைபேசியில் அப்பணிப்பெண் அடிக்கடி பார்த்து வந்ததை அவரது முதலாளி கவனித்தார்,” என்று அப்பேச்சாளர் சொன்னார்.
சிரியா, மியன்மார், பாலஸ்தீனம் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் ஆயுதம் ஏந்திய வன்முறையை அப்பணிப்பெண் ஆதரித்ததாகவும் தாம் ரசித்த போராளிகள் சில­ருடன் இணையத்தில் நண்பரான­ தாகவும் அமைச்சு குறிப்பிட்டது.
ஆனால், அப்பணிப்பெண் குறித்த மேல் விவரங்கள் வெளி­யிடப்படவில்லை. போரால் பாதிக்­ கப்பட்ட அப்பகுதிகளுக்கு அவர் செல்ல விரும்பியதாகவும் தெரி­ விக்கப்பட்டது.
பயங்கரவாதச்  சித்தாந்தங்களை போதிப்பவர்களின் காணொளியை யும் அதுதொடர்பான மற்ற பதிவுகளையும் பார்த்த பிறகு அப்பணிப்பெண் தீவிரவாதப் போக்­­கிற்கு ஆளானதாக விசார ணை­யின் மூலம் தெரிய வந்துள்ளது.
இங்கு வன்முறைச் செயல்களை மேற்கொள்ள அப்பணிப்பெண்­ணுக்கு எந்தவொரு திட்டமும் இல்லை என்றாலும், அவரது முதலாளி இது குறித்து தெரி­யப்படுத்தியதால் சிங்கப்பூருக்கு ஏற்படக்கூடிய மிரட்டல்களை முறி­யடிக்க முடிந்ததாக உள்துறை அமைச்சு கூறியது.
கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியிடப்பட்ட சிங்கப்பூர் பயங்­கரவாத மிரட்டல் மதிப்பீட்டு அறிக்­ கையின்படி, 2015ஆம் ஆண்டில் இருந்து சுய தீவிரவாதப் போக்­கிற்கு ஆளான 14 இல்லப் பணிப்­ பெண்கள் அவர்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்­பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இங்குள்ள வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களிடம் சுய தீவிர­வாதப்போக்கு தொடர்ந்து நிலவு­ வதாக அந்த அறிக்கையில் குறிப்­ பிடப்பட்டிருந்தது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள செயிண்ட் அந்தோணியர் தேவாலயத்திற்கு வெளியே நிற்கும் கிறிஸ்தவ மதபோதகர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

21 Apr 2019

'சமூகங்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்ட இலக்கு’

ஆர்ச்சர்ட் ரோடு நடைபாதையில் மஞ்சள் சட்டை அணிந்த சிறுவன் மீது மின்-ஸ்கூட்டர் இடித்துவிட்டது. இதனால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்தார். படம்: ஃபேஸ்புக் (அண்டி யூவ் மாய்)

21 Apr 2019

ஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை 

மத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து பெண் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம்: வாசகர்

21 Apr 2019

நான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது