$260,000 ஏமாற்றியதாக புகார்: 39 வயது ஆடவர் கைது

போலிஸ், 39 வயது ஆடவர் ஒரு வரைக் கைது செய்துள்ளது. $260,000 ஏமாற்று விவகாரம் தொடர்பில் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக போலிஸ் தெரிவித்துள்ளது. 
இயோ சூ காங் ரோட்டில் இருக்கும் வீடு ஒன்றிலிருந்து $260,000 திருடப்பட்டுவிட்டதாக பிப்ரவரி 3ஆம் தேதி மாலை சுமார் 6.10 மணிக்குப் போலிசிடம் ஒருவர் புகார் தெரிவித்தார். 
அதனை அடுத்து அங் மோ கியோ போலிஸ் பிரிவு அதிகாரி கள் புலன்விசாரணை நடத்தி, புகார் அளிக்கப்பட்டு 15 மணி நேரத்தில் சந்தேகநபரை பாலஸ் டியர் பகுதியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் கைது செய்தனர். $227,550 கைப்பற்றப்பட்டது. 
சிங்கப்பூர் டாலருக்குப் பதில் சீன நாணயத்தை மாற்றித் தரும் சாக்கில் அந்தச் சந்தேகப்பேர்வழி அந்த அப்பாவியைச் சந்திக்க ஏற்பாடு செய்து இருக்கிறார் என்று நம்பப்படுகிறது. 
சந்தேக நபர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட் டது. குற்றவாளி என்று தீர்ப்பானால் பத்தாண்டுவரையிலான சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப்படலாம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பிள்ளைகள் ஆரோக்கியமாக இருப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று நேற்று வடகிழக்கு வட்டார மேயர் டெஸ்மண்ட் சூ கூறினார். படம்: 'கெல்லோக்ஸ்'

21 Jul 2019

ஆரோக்கிய உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கும் ஓராண்டு திட்டம்

தொண்டூழியர்கள், அதிபர் சவால் நன்கொடைத் திட்டம் மூலம் பயனடைந்து வருபவர்கள் ஆகியோருடன் திருவாட்டி ஹலிமா சந்தித்துப் பேசியதுடன் தெரு காற்பந்து, கூடைப்பந்து, வலைப்பந்து, நடனம் போன்ற பல அங்கங்களில் பங்கேற்றார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Jul 2019

அதிபர் ஹலிமா யாக்கோப்: சமூகத்திற்கு ஆதரவு அளிக்க இளையர்கள் முன்வர வேண்டும்