இஸ்தானா 150 ஆண்டுகள்: நினைவுப் பதக்கம் வெளியீடு 

சிங்கப்பூரின் மிகப் பழமையான தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றான இஸ்தானாவின் 150வது ஆண்டைக் கொண்டாடும் வகை யில் அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று இஸ்தானா 150 நினைவு தொடரின் புதிய பதிப்பு ஒன்றை வெளியிட்டார். அது பதக்கங்கள் மற்றும் ‘ஃபிளாஷ்பே’ அட்டை களைக் கொண்டதாகும். 

சீனப் புத்தாண்டையொட்டி இஸ்தானா நேற்று பொதுமக்களுக் குத் திறந்துவிடப்பட்டது. அப் போது இந்தச் சிறப்பு பதிப்பை அதிபர் வெளியிட்டார். 
இந்தப் பதிப்பில் இடம்பெற்று இருக்கும் ஐந்து பதக்கங்கள், இஸ்தானா திடலுக்குள் உள்ள கட்டடங்களின் கட்டடக் கலை யையும் இஸ்தானாவின் சிறப்பு இயல்புகளையும் சித்தரிக்கின்றன. 

இதன் மூலம் கிடைக்கும் தொகையின் ஒரு பகுதி, அதிபர் சவால் அறப்பணிக்கு நன்கொடை யாக வழங்கப்படும். 
அந்த நிகழ்ச்சியில் பேசிய அதிபர், “இன்று இஸ்தானா பொது வரவேற்பை முன்னிட்டு அதிக எண்ணிக்கையில் இங்கு வந்து சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் சிங்கப்பூரர்களைக் காண மகிழ்ச்சியாக உள்ளது.  

“புதிய நினைவுப் பொருட் களுடன் சிங்கப்பூரர்கள் தங்களு டன் இஸ்தானா பற்றிய நினைவு களையும் வீட்டிற்குச் எடுத்துச் செல்லலாம்,” என்றார் அவர். 
பதக்கங்களின் வடிவமைப்பு கள், இஸ்தானாவுக்குள் கடைப் பிடிக்கப்படும் பழக்க வழக்கங்      கள், மரபுகள் பற்றிய கதை களையும் எடுத்துக் கூறுவதாக அவர் குறிப்பிட்டார். 

இஸ்தானாவின் 150வது ஆண்டுவிழா இதர பல நிகழ்ச்சி களிலும் கலந்துகொண்டு மக்கள் மகிழ்வர் என்று நம்புவதாகவும் அதிபர் தெரிவித்தார்.
 

Loading...
Load next