மின்ஸ்கூட்டர் காரணமாக தீ; வீட்டில் மூன்று பேர் காயம் 

கே‌ஷியூ ரோட்டில் இருக்கும் அடுக்குமாடி வீடு ஒன்றில் திங் கட்கிழமை இரவு மூண்ட தீயில் மூன்று பேர் காயம் அடைந்து விட்டார்கள். 
  அந்த வீட்டின் படுக்கை அறை ஒன்றில் வைக்கப்பட்டு இருந்த மின்ஸ்கூட்டரில் இருந்து தீ மூண்டதாகத் தெரிகிறது. 
அந்த ரோட்டில் இருக்கும் 132வது புளோக்கில் உள்ள 6வது மாடிவீட்டில் நிகழ்ந்த தீ விபத்து பற்றி சிங்கப்பூர் குடிமைத் தற்காப் புப் படை பல விவரங்களைத் தெரிவித்தது. 
தீ மூண்டதை அடுத்து சுமார் 100 பேர் அப்புறப்படுத்தப்பட்டனர். மூன்று பேர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். அந்தத் தீ சுமார் 15 நிமிடத்தில்  அணைக்கப் பட்டது. 

தீயணைப்பாளர்கள் 15 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். மின்ஸ்கூட்டரிலிருந்து தீ மூண்டதாகத் தெரியவந்துள்ளது.     படம்: ஃபேஸ்புக்/ சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை