இளம் குடும்பங்களுக்கு அளித்து வரும் ஆதரவை, குறிப்பாக குழந்தைப் பராமரிப்பில் வழங்கப் படும் ஆதரவை அரசாங்கம் வலுப் படுத்தும் என்று மனிதவள அமைச் சர் ஜோசஃபின் டியோ தெரிவித்து உள்ளார். கேகே மகளிர், சிறார் மருத்துவ மனைக்கு நேற்று முன்தினம் சீனப் புத்தாண்டு வருகை மேற்கொண்ட அமைச்சர் அங்குள்ள தாதியர் களையும் நோயாளிகளையும் சந் தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருவாட்டி டியோ, குழந் தைப் பராமரிப்புத் துறையை வலுப் படுத்துவதில் அரசாங்கம் இப் போது கவனம் செலுத்தி வருகிறது என்றும் போதிய, தரமான, கட்டுப் படியாகக்கூடிய குழந்தைப் பரா மரிப்பு இடங்கள் கிடைப்பதை அர சாங்கம் உறுதி செய்யும் என்றார். 2012ஆம் ஆண்டுடன் ஒப்பிடு கையில் இப்போது குழந்தைப் பராமரிப்பு இடங்கள் இரட்டிப்பாகி உள்ளன என்றும் வரும் 2023ஆம் ஆண்டுக்குள் குழந்தைப் பராம ரிப்பின் மொத்த இடங்கள் 200,000க்கு உயரும் என்றும் விவ ரித்தார். "குழந்தைப் பராமரிப்புத் துறை விரிவாக்கம் பெற்றிருப்பதை நீங் கள் பார்த்தால், அது குறிப்பிடத் தக்க மாற்றத்தை அடைந்திருக் கிறது என்பதை உணர்வீர்கள்," என்றும் அவர் குறிப்பிட்டார். சிங்கப்பூரின் குழந்தைப் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, குழந் தைப் பராமரிப்புக்கான ஆதரவை மட்டும் அதிகரிப்பது போதுமான தாக இருக்காது என்று கூறிய அமைச்சர், நாட்டின் மொத்த குழந் தைப் பிறப்பு விகிதம் 2017ஆம் ஆண்டில் 1.16 புள்ளிக்குச் சரிந்து, இரண்டாவது ஆகக் குறைவான விகிதமானது என்பதைச் சுட்டி னார்.
இளம் குடும்பங்களுக்கு வழங்கப்படும் ஆதரவை அரசாங்கம் வலுப்படுத்தும்
1 mins read
கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் வருகை அளித்த மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ (நடுவில்), சீனப் புத்தாண்டு காலத்தில் பணியாற்றும் அங்குள்ள தாதியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். படம்: பிரதமர் அலுவலகம் -

