விவியன்: சிங்கப்பூர்-சீன உறவு சிறப்புடன் வளர்ந்து வருகிறது

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையில் அண்மைய ஆண்டு களில் உறவுகள் மிகச் சிறந்த முறையில் வளர்ந்து வந்துள்ளன என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரி வித்துள்ளார்.
சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழிற்சபையின் சீனப் புத்தாண்டு ஒன்றுகூடல் விருந்தில் நேற்று முன்தினம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட டாக்டர் விவியன், “இரு நாட்டு உறவுகள் பன்மடங்கு பெருகியுள்ளதற்கு சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழிற்சபையும் ‘பிஸ் னஸ் சைனா’ அமைப்பும் முக்கிய காரணங்களாக விளங்குகின்றன.
“இந்த இரு அமைப்புகளும் சீனா போன்ற வல்லரசுகளுடன் சிங்கப்பூர் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள உதவியுள்ளன. இதனால் சிங்கப்பூரின் உதவும் மனப்பான்மை யும் நம்பத்தன்மையும் அனைவருக் கும் நடுநிலையான நாடு என்ற தகுதியும் தொடர்ந்து வலுப்பெற்
றுத் திகழ்கின்றன,” என்று தமது உரையில் கூறினார்.
“கடந்த பல ஆண்டுகளில் நாம் விரிவான வர்த்தகத்தையும் பொருளியல் இணைப்புகளையும் வளர்த்து வந்துள்ளோம். சீனாவின் மிகப் பெரிய வெளிநாட்டு முதலீட் டாளராக சிங்கப்பூர் திகழ்கிறது.
“அதேபோல் நமது ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக சீனா விளங்குகிறது. சீனாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நிறுவ னங்கள் சிங்கப்பூரில் செயல்படு கின்றன.