மலேசியாவிலிருந்து சிகரெட்டு  கடத்திய 25 பேர் பிடிபட்டனர்

இணையத்தில் வலம் வந்த விளம்­பரங்களால் ஈர்க்கப்பட்டு வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை சிங்கப்பூருக்குள் கடத்திய 25 வாகன ஓட்டுநர்கள் கடந்த ஆண்டு பிடிபட்டனர்.
ஃபேஸ்புக், வீசேட் போன்ற சமூக வலைத்தளங்களில் வலம் வந்த இந்த விளம்பரங்கள், சிங்கப்­பூருக்குள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கடத்தும் ஒவ்வொரு பயணத்திற்கும் பொது­வாக $100க்கும் $600க்கும் இடைப்பட்ட தொகையை வழங்க முன்வந்தன.
சீன மொழியில் எழுதப்பட்டிருந்த அத்தகைய ஒரு விளம்பரத்தில், "பெட்ரோல் நிரப்ப நீங்கள் அடிக்­கடி ஜோகூர் பாருவிற்கு செல்வீர்­ களானால், சற்று கவனியுங்கள். ஜோகூர் பாருவிற்கு செல்லும் அதிக எண்ணிக்கையிலான சிங்கப்பூர் ஓட்டுநர்களை நாங்கள் பணியில் அமர்த்த விரும்புகிறோம். சிங்கப்பூருக்கு அடிக்கடி வந்து­செல்லும் மலேசிய நண்பர்கள் வரவேற்கப்படுகின்றனர்.
"உங்களது வழக்கமான வேலையை இது எந்த வகையிலும் பாதிக்காது. உங்களுக்கு சொந்த கார் இல்லையென்றாலும் பரவா­ யில்லை, நாங்கள் உங்களுக்கு ஒன்றை வழங்குகிறோம். 22க்கும் 55 வயதுக்கும் இடைப்பட்டவர்களை நாங்கள் நேர்முகத் தேர்வுக்குத் தேடுகிறோம்," என்று குறிப்பிடப்­ பட்டிருந்தது.
இங்கு வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை கடத்தியதற்காக பிடிபட்ட அந்த 25 ஓட்டுநர்­ களுக்கு 10 வாரங்கள் முதல் ஆறு மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்­ பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!