‘தொடக்கப்பள்ளி செல்வோருக்கு ஆதரவு தேவை’

பாலர் பள்ளியிலிருந்து தொடக்கப்­பள்ளிக்குச் செல்லும் சிறுவர்­களுக்கு உணர்வுபூர்வமாக கூடுதல் ஆதரவு தேவைப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தேசிய கல்விக் கழகத்தின் புதிய வழிகாட்டியில் இடம்பெற்றுள்ள அதற்கான ஆலோசனையைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் படித்து தெரிந்து­கொள்ள­லாம்.
அந்த வழிகாட்டியின் 3,000 பிரதிகளில் பாதிக்கும் அதிகமானவை பாலர் பள்ளி­ களுக்கும் கல்வியாளர்­களுக்கும் விநியோகிக்கப்பட்டு உள்ளன.
இன்னும் இரு மாதங்களில் அந்த வழிகாட்டியை இணையத்தில் வழங்குவது இலக்கு.
தேசிய கல்விக் கழகத்தின் இந்தத் திட்டம் 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தங்களது பிள்ளைகளின் உணர்வுபூர்வ வளர்ச்சியில் பெற்றோர்கள் அதிக அக்கறை கொண்டிருந்ததாக அது மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்தது.