அவசரகாலத்தில் உயிர் காக்கும் திறன்களுக்காக பெயர் பெற்றவர்கள் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள். அவர்களில் பெரும்பாலானோர் தீயை அணைப்பதில் அல்லது அவசரகால மருத்துவ உதவி வழங்குவதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்கள். ஆனால், சிறு குழுவினரே மருத்துவ உதவியாளர்களாகவும் தீயணைப்பாளர்களாகவும் இரு பணிகளையும் புரிவதற்கான பயிற்சியைப் பெற்று உள்ளனர். பலதரப்பட்ட சம்பவங்களை அதிகாரிகள் திறம்பட கையாள வேண்டும் என்று குடிமைத் தற்காப்புப் படை இலக்கு நிர்ண யித்துள்ளது. அதனையொட்டி அதிகாரிகளில் சிலருக்கு பயிற்சி வழங் கப்பட்டுள்ளது. மருத்துவ உதவியாளர்களாக பணியாற்ற தொடங்கி, பின்னர் தீயணைப்பதிலும் பயிற்சி பெற்றுள்ள சுமார் 10 அதிகாரிகள் இப்போது குடிமைத் தற்காப்புப் படையில் உள்ளனர்.
தீ, அவசரகால மருத்துவ சம்பவங்களை கையாள பயிற்சி பெற்ற அதிகாரிகள்
1 mins read

