ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் முன்னாள் தலைவர் பெஞ்சமின் விலகல்

ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் முன்னாள் தலைவரான பெஞ்சமின் புவி அந்தக் கட்சியிலிருந்து விலகி உள்ளார். இன்னும் பெரிய, ஆற்றல்மிக்க கட்சியில் தாம் சேரப் போவதாக அவர் தெரிவித்தார்.
தம்மைப் போலவே மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அந்தப் புதிய கட்சியில் சேர்வார்கள் என்று 51 வயது திரு புவி நம்பிக்கை தெரிவித்தார். ஆனால், அவர் எந்தக் கட்சியில் சேரப் போகிறார் என்பதைக் கூற மறுத்து விட் டார். தமது உறுப்பியம் பற்றி அந்தக் கட்சியின் தலைவர்கள் அறிவிப்பார்கள் என்றும் திரு புவி சொன்னார்.
மேலும், தாம் சிங்கப்பூர் மக்கள் கட்சியில் சேரப் போவ தில்லை என்றும் திரு புவி உறுதிப்படுத்தினார். அவர் கடந்த 2011, 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் சிங்கப்பூர் மக்கள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். 
“சிங்கப்பூரில் எதிர்த்தரப்பு என்பது சிறிய எதிர்க்கட்சி களைக் கொண்ட ஒரு பெரிய இரவுச் சந்தையைப் போன்றது.  வளங்கள், முயற்சி, அளவு எதுவும் இல்லாதது. நான் சிறிய கட்சியிலிருந்து விலகி, ஆற்றலுடைய ஒரு பெரிய கட்சியில் சேரப் போகிறேன்,” என்றார் திரு புவி.
திரு புவியுடன் சேர்த்து சுமார் ஐந்து உறுப்பினர்கள் ஜனநாயக முன்னேற்றக் கட்சியிலிருந்து விலகவிருக்கிறார் கள் என்று அறியப்படுகிறது. மக்கள் செயல் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டான் செங் போக் தேர்தல் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடத்திய ஏழு கட்சிகளுள் ஜனநாயக முன்னேற்றக் கட்சியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த பொதுத் தேர்தல் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தப்பட வேண்டும். 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உச்ச நேரங்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க விரும்பி கடற்பாலத்தில் நடந்து செல்பவர்களின் பாதுகாப்புக்காக நடைபாதை தேவைப்படுகிறது. படம்: சாவ்பாவ்

19 Jun 2019

கடற்பாலத்தில் நடைபாதை கட்ட ஜோகூர் திட்டம்

சிங்கப்பூரிலுள்ள 16 நகர மன்றங்களும் புதிய ஆளுமை முறைமைக்கு உட்பட்டுச் செயல்படவேண்டும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Jun 2019

நகர மன்றங்களுக்குப் புதிய ஆளுமை முறைமை

ஜூரோங் தீவில் உள்ள இவோனிக் நிறுவனத்தின் இரண்டாவது ஆலை நேற்று தனது செயல்பாட்டை தொடங்கியது. படம்: இவோனிக்

19 Jun 2019

சிங்கப்பூரில் $768 மி. செலவில்  ‘இவோனிக்’கின் 2வதுநிறுவனம்