புளோக்கிற்குக் கீழ் இறந்து கிடந்த தாயும் மகளும்

இந்தியப் பெண் ஒருவரும் அவரது ஐந்து வயது மகளும்  நேற்று அடுக்குமாடி புளோக் ஒன்றின் கீழ் இறந்து கிடக்க காணப்பட்டனர். இந்தச் சம்பவம் ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 21லுள்ள புளோக் 288பியில் நிகழ்ந்தது.

தனியார்துறையில் தாதியாகப் பணிபுரிந்த 29 வயது திருவாட்டி சிவா‌ஷினி ஜொஹனன், தனது மகள் சிரிலன்யா கணேசனுடன் புளோக்கின் உயரத்திலிருந்து கீழே விழுந்ததாக நம்பப்படுகிறது.

சம்பவம் குறித்த தகவல் நேற்று முன்தினம் இரவு 9.51 மணிக்குக் கிடைத்ததாக போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். இந்த மரணங்கள் இயற்கைக்கு மாறானவை என்று போலிசார் தெரிவித்துள்ளனர்.

மேல் விவரங்கள் பிப்ரவரி 9ஆம் தேதி வெளிவரும் தமிழ் முரசு இதழில் உள்ளன.