போலி அதிர்ஷ்ட குலுக்கல் பற்றி குறுந்தகவல்களுக்கு எதிராக சிங்போஸ்ட் எச்சரிக்கை

தனது பெயரில் மோசடிக்காரர்கள் அனுப்பும் குறுந்தகவல்களால் ஏமாறாமல் இருக்க ‘சிங்போஸ்ட்’ அஞ்சல் நிறுவனம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

இதுபோன்ற போலி குறுந்தகவல் ஒன்றை ‘சிங்போஸ்ட்’ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது. போலி குறுந்தகவலைப் பெற்றவரிடம் அவர் ஜனவரி மாதத்தில் நடந்த அதிர்ஷ்ட குலுக்கலில் வெற்றி அடைந்திருப்பதாக அந்தக் குறுந்தகவல் குறிப்பிட்டிருந்தது. ‘சிங்போஸ்ட்’ சின்னத்தைக் கொண்டிருக்கும் போலியான இணையத்தள இணைப்பு ஒன்றும் இதற்குள் இணைக்கப்பட்டுள்ளது. 

வாடிக்கையாளர் சிலர் இந்த மோசடி பற்றி ‘சிங்போஸ்ட்’ நிறுவனத்திடம் தெரிவித்ததாக அதன் பேச்சாளர் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழிடம் தெரிவித்தார்.