ஹெங்: தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பர்

தோல்விகள் ஏற்படும்போதெல்லாம் தன்னை மீளாய்வு செய்துகொள் வதில் அரசாங்கம் தளர்ந்துபோகாது என்றும் பிரச்சினைகளைச் சரி செய்யத் தேவையான நடவடிக்கை களை அரசாங்கம் எடுக்கும் என்றும் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், ஒட்டுமொத்த நிர்வாகமும் தளர்ந்துபோக சிங்கப்பூரின் அரசியல் தலைமைத் துவம் அனுமதித்துவிட்டது என்ற கருத்தை திரு ஹெங் நிராகரித்
தார்.
‘லியான்ஹ சாவ்பாவ்’ சீன நாளிதழில் கடந்த வாரம் வெளி யான ஒரு தலையங்கம், அரசாங்க நிர்வாகம் பற்றி கடுமையான கேள் விகளை எழுப்பியதாகவும் தாமும் தமது அமைச்சரவை சகாக்களும் அந்தக் கேள்விகளுக்குப் பதில ளிக்காமல் புறக்கணிக்கமாட்டோம் என்றும் அமைச்சர் ஹெங் கூறி னார்.
‘சிங்ஹெல்த்’ இணையத்தள ஊடுருவல், ‘எச்ஐவி’ நோயாளிகள் பற்றிய தரவுக் கசிவு, தேசிய சேவைப் பயிற்சியின்போது நிகழ்ந்த மரணங்கள் ஆகியவற் றுக்கு அரசாங்கத்தின் மெத்தனப் போக்கே காரணம் என்று அந்தத் தலையங்கம் சாடியிருந்தது. 
அத்தகைய நிர்வாகச் சீர்குலை வுகளைத் தவிர்த்து, மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டுமெனில் அந்தச் சம்பவங் களுக்கான காரணங்களை ஆழ மாக ஆராயவேண்டும் என்று அர சாங்கத்திற்குக் கோரிக்கை விடுத்திருந்தது. 
இவ்வேளையில், நிர்வாக அமைப்பை வலுப்படுத்துவதிலும் தங்களது பொறுப்புணர்வை உறுதிப்படுத்துவதிலும் இன்னும் சிறப்பாகச் செய்யவேண்டும் என்ற கலாசாரத்தை முன்னிறுத்துவதி லும் அரசியல் தலைவர்கள் எவ்வ ளவு உழைக்கின்றனர் என்பதைத் திரு ஹெங் விளக்கியுள்ளார்.
“ஒவ்வொரு தலைமுறையும் தனக்கான சவால்களையும் சில முக்கியமான சம்பவங்களையும் எதிர்கொள்கிறது. ஆனால், ஒவ் வொரு முறையும் தேசத்தின் முன் னோடிகள் வலிதரும் பாடங்களைக் கற்றுக்கொள்வதோடு, பிரச்சினை களையும் சரிசெய்கின்றனர். இந் தக் கூட்டு முயற்சிகள் சிங்கப்பூர் மேம்பட்ட வளர்ச்சியை எட்ட உதவி இருக்கின்றன,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.