இயன்மருத்துவப் பணிக்கு மாற துரிதமான பட்டக்கல்வித் திட்டம்

வாழ்க்கைத் தொழிலில் இடைநிலை மாற்றம் செய்ய விரும்புவோர் இயன்மருத்துவத் துறைக்கு மாறிக்கொள்ளலாம்.
அதற்கு ஏதுவாக அத்துறைக் கான துரிதப்படுத்தப்பட்ட பட்டக் கல்வி திட்டம் நேற்று அறிமுகமா னது.
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழ கம் வழங்கும் இயன்மருத்துவருக் கான நிபுணத்துவ மாற்றுத்திட்டம் (துரிதப்படுத்தப்பட்டது) என்ற பட்டக் கல்வி, ஏற்கெனவே உடற் பயிற்சி, விளையாட்டு அறிவியல் மற்றும் உயிர் அறிவியல் தொடர் பான பட்டக்கல்வி வைத்திருக்கும் வாழ்க்கைத் தொழிலில் இடைநிலை மாற்றம் செய்ய விரும்பும் உள்ளூர் மக்களுக்காக வடிவமைக்கப்பட் டுள்ளது.
இவ்வாண்டு செப்டம்பர் மாதம் தொடங்கும் இந்தப் பட்டக்கல்வி மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவு பெற்றுவிடும்.
இயன்மருத்துவர்களுக்கான நான்கு ஆண்டு நிபுணத்துவ மாற்றுத் திட்டத்தில் டிப்ளோமா வைத் திருப்பவர்கள், மேல்நிலை தேர்வு முடிவு வைத்திருப்பவர்கள் ஆகியோருடன் வாழ்க்கைத் தொழிலில் இடைநிலை மாற்றம் செய்ய விரும்புவோரும் சேர்ந்துகொள்ளலாம்.
இந்த வாழ்க்கைத் தொழில் மாற்றுத் திட்டங்களை சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு, நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு வழங்கப் படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!