‘மலேசிய கப்பல் மீது கிரேக்கக் கப்பல் மோதியது மோசமான விபத்து அல்ல’

சிங்கப்பூர் கடற்பகுதியில் நேற்று முன்தினம் 'போலாரிஸ்' எனும் மலேசிய அரசாங்கக் கப்பல் மீது 'பிராயஸ்' எனும் கிரேக்கக் கப்பல் மோதியது.
கிரேக்கக் கப்பல் கிளம்பும் நேரத்தில் மோதல் நிகழ்ந்தது என்றும் இது மோசமான விபத்து இல்லை என்பதால் அடுத்த துறைமுகத்திற்குக் கப்பல் போக அனுமதிக்கப்பட்டது என்றும் சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் நேற்று கூறியது.
சனிக்கிழமை பிற்பகல் 2.28 மணிக்கு 'பிராயஸ்' கப்பல் சிங்கப்பூரிலிருந்து புறப்படத் திரும் பியபோது 'போலாரிஸ்' மேல் மோதியது.
இருப்பினும் அனைத்துலக கடல்துறை அமைப்பின் விபத்து விசாரணை குறியீட்டின்படி இதை ஒரு மோசமான கடல்துறை விபத்து எனக் கருதவில்லை என ஆணையம் விளக்கியது.
அதனால் 'பிராயஸ்' தனது அடுத்த துறைமுகமான ஜோகூரில் உள்ள தஞ்சோங் பெலபாசுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
பிடோக்கிற்குத் தெற்கே அமைந்துள்ள தீவின் எரிபொருள் நிரப்பும் இடத்தில் 'பிராயஸ்' எண் ணெய் நிரப்பிவிட்டு புறப்படுவதாக ஆணையத்திற்குத் தெரிவித்தது. ஆனால் பிற்பகல் 1.55 மணிக்குக் கப்பல் துவாசுக்கு அப்பால் உள்ள சிங்கப்பூரின் கடற்பகுதிக்குள் நுழைந்துவிட்டது.
உடனே வேகத்தைக் குறைத் துக்கொண்டு, திசையை மாற்றிய போதுதான் 'போலாரிஸ்' மீது மோதியது என்று ஆணையம் விவரித்தது.
அதைத் தொடர்ந்து ஆணையத் தின் செயல்பாடுகள் கட்டுப்பாட்டு நிலையம் 'பிராயஸ்' கப்பலுடன் தொடர்பு ஏற்படுத்தி அப்பகுதியைத் தவிர்த்துவிடுமாறு உத்தரவிட்டது.
உத்தரவு இடப்பட்டபோது, 'போலாரிஸ்' கப்பலுடன் மோதிய தாகவும் தனக்கு எந்தவிதச் சேதமும் ஏற்படவில்லை என்றும் 'பிராயஸ்' கப்பல் ஆணையத்திற் குத் தகவல் தெரிவித்தது.
சிங்கப்பூரின் எல்லைப்பகுதி நீரில் இவ்விபத்து நேர்ந்ததால் ஆணையம் உடனே விசாரணையை மேற்கொண்டது.
இதன் தொடர்பில் மலேசிய கடல்துறைப் பிரிவுக்கும் கிரேக்க ஹெல்லேனிக் கடல்துறைச் சம்பவங்கள் விசாரணைப் பிரிவுக்கும் ஆணையம் அதிகாரபூர்வ தகவல் களை அனுப்பியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!