வாடகை வீடுகளில் குடியிருந்த கிட்டத்தட்ட 3,500 பேர் கடந்த ஆறு ஆண்டுகளில் சொந்த வீடு கள் வாங்கியுள்ளதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் நேற்று கூறியது. கழகத்தின் தேவைக்கேற்ப கட் டப்படும் வீட்டுத் திட்டம், மீதியிருக் கும் வீடுகளின் விற்பனைத் திட் டம் ஆகியவற்றின்கீழ் 2013ஆம் ஆண்டுமுதல் 2018ஆம் ஆண்டு வரை இவ்வீடுகள் விற்கப்பட்டன. இந்த 3,500 பேரில் 2,000 குடி யிருப்பாளர்கள் வீட்டுச் சாவி களைப் பெற்றுக்கொண்டு புதிய வீடுகளில் குடியேறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவ்வகையில் சராசரியாக ஓர் ஆண்டில் 600 வாடகை வீட்டுக் குடியிருப்பாளர்கள் வீட்டு உரிமை யாளர்களாகின்றனர். சொந்த வீடுகளை முதல் முறை யாக வாங்கிய வாடகை வீட்டுக் காரர்கள் தொடர்பிலான தகவல் களையும் கழகம் வெளியிட்டது. 47 விழுக்காட்டினர் மூவறை வீடுகளையும் 28 விழுக்காட்டினர் ஈரறை வீடுகளையும் எஞ்சியோர் வேறு வகை வீடுகளையும் தேர்ந் தெடுத்திருந்தனர். இவ்வெண்ணிக்கைபடி நான் கில் மூவர் இரண்டறை அல்லது மூவறை வீடுகளை வாங்கியிருந் தனர். தகுதிபெறும் குடும்பங்கள் வீவக வீட்டை வாங்கும்போது கூடுதல் மசேநிதி வீட்டு மானியத் திலிருந்து $40,000, சிறப்பு வீட்டு மானியத்திலிருந்து $40,000 என அதிகபட்சமாக $80,000 வரை உதவி நிதி பெறலாம். அவ்வாறு இக்குழுவில் மானியம் பெற்றுப் பலன் அடைந்தவர்கள் 72 விழுக்காட் டினர். அத்துடன் வாடகைதாரர்கள் முன்னுரிமைத் திட்டத்தின்கீழ் வீடுகளுக்காக பதிவு செய்தோர் 20 விழுக்காட்டினர் என்றும் கழகம் தெரிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி பெறும் வாடகைதாரர்களுக்காக விற்பனைக்கு வரும் வீடுகளில் 10 விழுக்காட்டை கழகம் எப்போதும் ஒதுக்கிவிடும்.
வாடகை வீடுகளில் இருந்த 3,500 பேருக்குச் சொந்த வீடு
2 mins read
ஐந்து ஆண்டுகளாக வாடகை வீட்டில் இருந்த திரு முகம்மது சுஹாய்மி ஜுனய்னி குடும்பத்தார் கடந்தாண்டு ஜூரோங் வெஸ்ட்டில் தங்களுக்குச் சொந்தமான மூவறை வீட்டில் குடியேறினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

