மெர்டேக்கா தலைமுறைத் திட்டத்திற்கான நிதியை தற்போதைய அரசாங்கம் ஒதுக்கும்

மெர்டேக்கா தலைமுறைத் தொகுப் புத் திட்டத்திற்குத் தற்போது நடப்பில் உள்ள அரசாங்கம் நிதி ஒதுக்கி வைக்கும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் நேற்று முன்தினம் உறுதி கூறினார்.
மெர்டேக்கா தலைமுறைத் திட்டத்திற்கு அரசாங்கம் எவ்வாறு நிதி ஒதுக்கும் என்று இளையர் களிடையே நிலவி வரும் அக்கறை களுக்கும் இத்திட்டம் தேர்தல் தொடர்பில் திட்டமிடப்பட்ட ஒரு தந்திரம் என்றும் கூறப்பட்டு வரு வதற்கும் சீனப் புத்தாண்டு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் சான் இவ்வாறு பதிலளித்தார்.
“மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டம் வேண்டும் என்று முடிவெடுக்கும் அரசாங்கம் அதற்கான பொறுப்பை ஏற்று, வளங்களை நிர்வகித்து நிதியை ஒதுக்க வேண்டும். அந்தப் பாரத்தை அடுத்து வரும் அரசாங் கங்கள் மீது திணிக்கக்கூடாது,” என்றார் அமைச்சர் சான்.