தெம்பனிஸ் கோவில் தீச்சம்பவத்தில் வழிபாட்டுப் பீடம், சிலைகள் சேதம்

தெம்பனிசில் உள்ள கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனக் கோவில் ஒன்றில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் வழிபாட்டுப் பீடமும் கிட்டத்தட்ட 30 சிலைகளும் பெரும் சேதமடைந்தன. அதிகாலை மூன்று மணிக்கு நெருப்பு பற்றியதாக கோவில் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் பகிர்ந்துகொண்டது. 
தீச்சம்பவம் குறித்து காலை 6.50 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. நெருப்பு ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய அது விசாரணை மேற்கொண்டுள்ளது. அத்துடன் நாளை பொறியியலாளர்கள் கோவில் கட்டமைப்பைச் சோதிக்கவுள்ளதாக கோவில் பேச்சாளர் தெரிவித்தார். தீச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் இல்லை என்றாலும் வழிபாட்டுப் பீடமும் அதைச் சுற்றியுள்ள இடமும் சாம்பலாகிவிட்டதாக கோவில் நிர்வாகக் குழு பெரும் வருத்தத்துடன் தெரிவித்தது. 
நெருப்பில் சேதமடைந்த சில சிலைகள் கோவில் போன்று பழமை வாய்ந்தவை என்று கோவில் தொண்டூழியர் ஒருவர் கூறினார். சம்பவத்தைப் பற்றி அறிந்த பொதுமக்கள் தொடர்ந்து கோவிலுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். தீச்சம்பவத்தால் ஏற்பட்ட சேதம் கிட்டத்தட்ட $300,000க்கும் $400,000க்கும் இடைப்பட்ட தொகை என மதிப்பிடப்படுகிறது.     
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று நடைபெற்ற தேசின தின அணிவகுப்பின் கூட்டு ஒத்திகை யின்போது, தேசிய தின அணிவகுப்பு 2019 அணிவகுப்பு மற்றும் சடங்குபூர்வ அங்கங்கள் துணைக் குழுத் தலைவர் மூத்த லெஃப்டினண்ட் கர்னல் லோ வூன் லியாங் (நடுவில்), அணிவகுப்புத் தளபதி லெஃப்டினண்ட் கர்னல் எல்வின் சூ, அணிவகுப்பு ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜர் மாஸ்டர் வாரண்ட் அதிகாரி சோங் வீ கியோங் ஆகியோருடன் அணிவகுப்பு பங்கேற்பாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

16 Jun 2019

அணிவகுப்பில் பங்கேற்கும் தொண்டூழியர் அணி