கலன்களை மீட்டுக்கொள்க:  சிங்கப்பூர் மீண்டும் கோரிக்கை

சிங்கப்பூரின் கடற்பகுதியிலிருந்து தனது கலன்களை மீட்டுக்கொள் ளும்படி மலேசியாவுக்கு சிங்கப் பூர் மீண்டும் கோரிக்கை விடுத்து உள்ளது. 
  துவாசுக்கு அருகே உள்ள அந்தக் கடற்பகுதியில் சனிக் கிழமையன்று கிரேக்க நாட்டு கப்பலும் மலேசிய அரசாங்கத்தின் கலனும் மோதிக்கொண்டு விபத் துக்குள்ளானதைத் தொடர்ந்து சிங்கப்பூரின் மறுகோரிக்கை இடம்பெற்று இருக்கிறது. 
மலேசியாவின் கலன்கள் விடாப்பிடியாக அந்தக் கடற்பகுதி யில் இருந்து வருவது பாதுகாப் பான போக்குவரத்துக்கு மிரட்ட லாக இருக்கிறது என்பது தெளி வாகத் தெரிகிறது என்று வெளி யுறவு அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. 
அந்தக் கடற்பகுதியில் மலேசியா தொடர்ந்து தன் கலன் களை நிறுத்தி வைத்து இருப்பதால் ஏற்படக்கூடிய பாதக சூழ்நிலை எதற்கும் மலேசியாதான் பொறுப்பு என்பதை மீண்டும் சிங்கப்பூர்  வலியுறுத்திக் கூறுவதாக அந்த அறிக்கை தெரிவித்தது. 
பிராயஸ் என்ற கிரேக்க நாட்டுக் கலன் ஜோகூரில் இருக் கும் தஞ்சுங் பெலபாஸ் துறை முகத்துக் குச் சென்றுகொண்டிருந் தது. அப்போது நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்த போலாரிஸ் என்ற மலேசிய கலனுடன் அது மோதிவிட்டது. இந்த விபத்து சனிக்கிழமை பிற்பகல் சுமார் 2.30 மணிக்கு நிகழ்ந்தது. இரண்டு கலன்களையும் சேர்ந்த ஊழியர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை. 
இதனிடையே, அந்த விபத்தை யடுத்து கிரேக்க நாட்டுக் கலனும் அதன் ஊழியர்களும் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாக சனிக் கிழமை இரவு மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.