தமிழ் முரசு எஸ்பிஎச் கல்வி உபகாரச் சம்பளம்

தமிழ்மொழி மீது பற்றும் ஆர்வமும் கொண்ட இரு மொழி ஆற்றல் கொண்டவரா நீங்கள்? புத்தாக்கச் சிந்தனையும் நடப்பு விவகாரம் பற்றிய புதிய பார்வையும் உள்ளவரா? சிங்கப்பூரில் நிறுவப்பட்டு, சிங்கப்பூர் இந்திய சமூகத்தின் குரலாகக் கடந்த 84 ஆண்டுகளாக வெற்றிகரமாக வெளிவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தமிழ் முரசு’ நாளிதழில் பணியாற்ற ஆர்வம் கொண்டவரா?

வளமான  வாழ்க்கைத் தொழிலைத் தமிழ் முரசு நிறுவனத்துடன் தொடரும் நோக்கத்தில் அதன் தாய் நிறுவனமான சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) சிறப்புமிக்க கல்வி உபகாரச் சம்பளத்தை அறிமுகப்படுத்துகிறது. குறிப்பாக தமிழ் முரசில் பணியாற்றுவதில் ஆர்வம் கொண்ட இளம் சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் உடனே இந்தக் கல்வி உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பிக்கலாம். 

செய்தியாளராக பணியாற்ற விரும்புவோரின் திறன்களை வளர்ப்பதற்கு எஸ்பிஎச் உபகாரச் சம்பளங்களை வழங்கி வருகிறது. மாறிவரும் உலகச் சூழலில் ஒவ்வொரு துறையும் மாற்றங்களை எதிர்நோக்கி வருகிறது. தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியும் அன்றாட செயல்பாடுகளில் மின்னிலக்க நடைமுறைகள் அதிகம் இடம்பிடித்து வரும் நிலையிலும் ஊடகத் துறையும் பல மேம் பாடுகளையும் மாற்றங்களையும் கண்டுவந்துள்ளது. 

அந்த வரிசையில் ஊடகப் பணியில் செய்தி சேகரிப்பதும் எழுதுவதும் மட்டுமின்றி காணொளிகள் போன்ற புதிய வடிவில் செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் இன்றைய செய்தியாளர்கள் ஈடுபடுகிறார்கள். இளங்கலைப் பட்டக்கல்வியைத் தொடங்குவோருக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 15ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பல்கலைக்கழக பட்டக்கல்வியில் பாதிவரை முடித்தவர்களுக்கு இந்த உபகாரச் சம்பளத்திற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதியுடன் முடிவடைகிறது. சமூக, நாட்டு, உலக நடப்புகளைக் கண்டறிந்து கற்றல் ஆர்வ மிகுதியுடன் இருமொழி ஆற்றலும் கொண்டவர் கள் உடனே விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.

தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். வேலைப் பயிற்சிக்கு அழைக்கப்பட்டு அதன் மூலம் உங்களின் தேர்வை உறுதிசெய்து கொள் ளலாம். https://www.sph.com.sg/careers-scholarships/scholarship-opportunities/ எனும் இணையப்பக்க முகவரி மூலமாகவோ scholars@sph.com.sg எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியோ பதிவு செய்துகொள்ளலாம். 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று நடைபெற்ற தேசின தின அணிவகுப்பின் கூட்டு ஒத்திகை யின்போது, தேசிய தின அணிவகுப்பு 2019 அணிவகுப்பு மற்றும் சடங்குபூர்வ அங்கங்கள் துணைக் குழுத் தலைவர் மூத்த லெஃப்டினண்ட் கர்னல் லோ வூன் லியாங் (நடுவில்), அணிவகுப்புத் தளபதி லெஃப்டினண்ட் கர்னல் எல்வின் சூ, அணிவகுப்பு ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜர் மாஸ்டர் வாரண்ட் அதிகாரி சோங் வீ கியோங் ஆகியோருடன் அணிவகுப்பு பங்கேற்பாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

16 Jun 2019

அணிவகுப்பில் பங்கேற்கும் தொண்டூழியர் அணி