அலோய்ஷியஸ் பாங் மரணம்: தூப்பக்கியை இறக்கும் சாதனத்தில் குறை இல்லை

சிங்கப்பூர் நடிகர் அலோய்ஷியஸ் பாங்கின் மரணத்திற்குக் காரணமான பீரங்கி தூப்பாக்கியில் குறைகள் எதுவும் இல்லை என்று தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். 
இதைத் தொடர்ந்து பேசிய அவர் ‘ஹவிட்ஸர் கேபின்’ என்ற அந்தப் பீரங்கியில் இருக்கும் ஒரு பிரிவில் இருந்த மற்ற இரண்டு தேசிய சேவையாளர்களின் விவரங்களையும் தெரிவித்தார். 

தயார்நிலை தேசிய சேவையாளரான அலோய்ஷியஸ் பாங் ஜனவரி மாதம் 19ஆம் தேதியில் அடைந்த காயங்களால் நான்கு நாட்களுக்குப் பிறகு உயிர் இழந்தார். 

பீரங்கி பிரிவிந் கட்டளை அதிகாரியான மூன்றாம் சார்ஜண்ட் ஒருவரும் ஆயுத விநியோங்களின் தொழில்நுட்ப வல்லுனரான இரண்டாம் ராணுவ நிபுணரான மற்றொருவரும் அதில் இருந்தனர். 

இவ்விருவரும் அந்தப் பீரங்கி பராமரிப்பில் அதிக அனுபவம் கொண்டவர்களாகவும் அவர்கள் தற்போது வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார் அமைச்சர் இங். 

ராணுவ பயிற்சிகளில் நிகழும் இறப்புகள் குறித்து நாடளுமன்ற உறுப்பினர்கள் கேட்ட 10க்கும் மேற்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் அமைச்சர்நிலை அறிக்கையை வழங்கினார் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங்.