பாதுகாப்பு அக்கறைகள் தவிர்த்த சுற்றப்புற மதிப்பீடுகள் வெளியிடப்படும்

பாதுகாப்பு அக்கறைகள் தவிர்த்த சுற்றுப்புறத்தைப் பாதிக்கும் மதிப்பீடுகளை வெளியிட அரசாங்கம் தயாராக உள்ளது என்று தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தேசிய பூங்காக்கள், இயற்கைப் பாதுகாப்புப் பகுதிக ளுக்கு அருகில் உள்ள கட்டுமானப் பணிகள் சுற்றுப் புறத்தைப் பாதிக்கும் மதிப்பீடுகளைக் கட்டாயமாக வெளி யிடுவது பற்றி அரசாங்கம் பரிசீலிக்குமா என்று நீ சூன் குழுத் தொகுதி உறுப்பினர் லுயிஸ் இங் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
ராணுவப் பயிற்சித் தளத்துக்கு அருகில் உள்ள தெங்கா காடுகளுக்குக் குறைவான பாதுகாப்பு முக்கியத்துவம் உள் ளது என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்ததை அடுத்து சர்ச்சைகள் எழுந்துள்ளன. 
பொது வீடமைப்புக்குரிய இடமாகத் தேர்வு பெற்றிருக்கும் சிங்கப்பூரின் முதலாவது ‘காட்டு நகரான’ தெங்கா பகுதி யின் பாதுகாப்பு குறித்த தரவுகளைத் தவிர்த்த முழு அறிக்கையைப் சம்பந்தப்பட்ட அமைப்புகள் வெளியிடுமா? என்று திரு இங் கேட்டார்.
இது குறித்து பேசிய அமைச்சர் லீ, “தெங்காவைப் பொறுத்தவரையில், சுற்றுப்புறவியல் அடிப்படை ஆய்வின் முடிவுகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஊடகத் திடம் பகிர்ந்துகொள்ளப்பட்டன. அது குறித்த விவரங்கள் இயற்கை ஆர்வலர்களுக்கும் தெரிவிக்கப்படும். ராணுவப் பயிற்சித் தளமாக உள்ள தெங்கா பகுதி அதன் நிலையை என்றும் பெற்றிருக்கும்,” என்றார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

புதிய மின்னியல் சாலைக் கட்டண முறை அடுத்த ஆண்டிலிருந்து தயாராகும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Jun 2019

அடுத்த ஆண்டு முதல் புதிய மின்னியல் சாலைக் கட்டணம்; வாகனங்களுக்குள் உள்ள சாதனம் இலவசமாக மாற்றப்படும்

நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் லீ சியன் லூங். படம்: எஸ்பிஎச்

17 Jun 2019

புதிய பாணி பெருநாள் கொண்டாட்டம்