தொடர் ஆணையிட்டும் நில்லாமல் சென்ற ‘பயோனிக்ஸ்’ கவச வாகனம்

‘கார்ப்பரல் ஃபர்ஸ்ட் கிளாஸ்’ லியு காய் இறந்த சம்பவத்தில் தொடர் ஆணை பிறப்பிக்கப்பட்ட நிலையி லும் ‘பயோனிக்ஸ்’ கவச வாகனம் பின்னோக்கிச் செல்வதை நிறுத்த வில்லை என்று தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
 அந்த கவச வாகனம் கார்ப்பரல் லியு இருந்த வாகனத் தின் மீது ஏறிய பின்னரே நின்ற தாக அவர் விளக்கினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சுயேச்சையான விசாரணைக் குழு ஒன்றும் போலிசாரும் விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதில் ‘பயோனிக்ஸ்’ குழு பயன்படுத்திய தொடர்புச் சாதனங் கள் சரிவர வேலை செய்தனவா என்பதை அவர்கள் ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.
மேலும், இந்தச் சம்பவத்தில் எவர் மீதாவது குற்றவியல் நட வடிக்கை மேற்கொள்ள காரணங் கள் உள்ளனவா என் பதையும் தலைமை சட்ட அதிகாரி அலுவ லகமும் ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படாவிடினும் இதில் குறை பாடுகள் அடையாளம் காணப்படு மானால், ராணுவ நீதிமன்றத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவ துடன் அது குறித்த விவரங்களும் வெளியிடப்படும் என்று அவர் சொன்னார்.

Loading...
Load next