சிகரெட்டுகளுக்கு ஒரே மாதிரி பாக்கெட்டுகள்

சிங்கப்பூரில் விற்கப்படும் சிகரெட் டுகள் விரைவில் ஒரே மாதிரியான பாக்கெட்டுகளில் விற்கப்படும். அதில் பெரிய சுகாதார எச்சரிக்கை கள் அச்சடிக்கப்பட்டிருக்கும்.
இவற்றைச் சாத்தியமாக்குவதற் கான திருத்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள் ளப்பட்டது.
புதிய சிகரெட் பாக்கெட்டுகளில் சின்னங்கள், வண்ணங்கள், ஓவி யங்கள், புகையிலை சார்பான இதர விளம்பர தகவல்கள் எதுவும் இருக்காது. சிகரெட் வகையின் பெயர்கள் ஒரே மாதிரியான எழுத் துருவிலும் வண்ணத்திலும் இருக் கும்.
புகைபிடிப்பதால் விளையும் தீமைகளை விளக்கும் சுகாதார எச்சரிக்கைகளின் அளவு பாக்கெட் டுகளில் முன்பு இருந்ததைவிட அதிகமாக இருக்கும். அதாவது முன்பு இருந்த 50% அளவு இப் போது 75% ஆக உயரும்.
“சட்டத்தில் கொண்டு வரப் பட்டுள்ள மாற்றங்கள் இந்தக் கொடிய பழக்கத்தைத் தொடங்கா திருக்க அறிவுறுத்தவும் புகைபிடிப் பதை விட்டொழிக்க மக்களுக்கு ஆலோசனை கூறவும் பொதுவில் புகையிலை இல்லா வாழ்க்கைப் பாணியை ஏற்றுக்கொள்ள சிங்கப் பூரர்களை ஊக்கப்படுத்தவும் உதவும்,” என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் எட்வின் டோங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இத்தகைய மாற்றங்கள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்று சுட்டிய அமைச்சர், உரிமமின்றி புகையிலை பொருட்களை இறக்குமதி செய் தல், விநியோகித்தல், வைத்திருத் தல், விற்பனை செய்தல் ஆகியவற் றுக்கு மேலும் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என்றும் விவரித்தார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று நடைபெற்ற தேசின தின அணிவகுப்பின் கூட்டு ஒத்திகை யின்போது, தேசிய தின அணிவகுப்பு 2019 அணிவகுப்பு மற்றும் சடங்குபூர்வ அங்கங்கள் துணைக் குழுத் தலைவர் மூத்த லெஃப்டினண்ட் கர்னல் லோ வூன் லியாங் (நடுவில்), அணிவகுப்புத் தளபதி லெஃப்டினண்ட் கர்னல் எல்வின் சூ, அணிவகுப்பு ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜர் மாஸ்டர் வாரண்ட் அதிகாரி சோங் வீ கியோங் ஆகியோருடன் அணிவகுப்பு பங்கேற்பாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

16 Jun 2019

அணிவகுப்பில் பங்கேற்கும் தொண்டூழியர் அணி