ஐந்து பிரிவினர் தொடர்பான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை

பதினான்கு வயதுக்குட்பட்ட சிறுவர்கள், பணிப்பெண்கள், உடற்குறை அல்லது மனநலம் பாதிக்கப்பட்டோர், குற்றவாளியுடன் நெருங்கி பழகுவோர், குற்றவாளியுடன் மிக நெருக்கமான உறவு வைத்திருப்போர் ஆகிய ஐந்து பிரிவினருக்கு எதிராக குற்றம் புரிவோருக்கு இரண்டு மடங்கு கூடுதலான தண்டனை கிடைக்கப்படுவதை குற்றவியல் சட்ட சீர்திருத்த திருத்த மசோதா உறுதி செய்யக்கூடும்.
மசோதாவின் திருத்தங்க ளைத் தாக்கல் செய்து பேசினார் உள்துறை அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம் ரின் அமின்.
குற்றவாளியுடன் நெருங்கி பழகுவோர் என்றால் அவருடன் ஒரே வீட்டில் தங்கியிருப்போர் அல்லது அடிக்கடி தொடர்புகொள்வோர். குற்றவாளியுடன் மிக நெருக்கமான உறவு வைத்திருப் போர் என்றால், ஒரு பிள்ளையைப் பராமரிப்பதில், ஆதரவளிப்பதில் பங்களிப்பதுடன் ஒருவர் மற்றொ ருவரின் நிதி ஆதரவைச் சார்ந்தி ருப்போர் என்று விளக்கப்பட்டது.
அடுத்த நாடாளுமன்றக் கூட் டத்தில் மசோதா விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும்.