சிங்கப்பூரர்கள், நியூசிலாந்து நாட்டவருக்கு தானியக்க குடிநுழைவு அனுமதி முறை

சிங்கப்பூரர்கள், நியூசிலாந்து நாட்டவருக்கு தானியக்க குடிநுழைவு அனுமதி முறை

1 mins read

சிங்கப்பூருக்கு வரும் நியூ­சிலாந்து நாட்ட­வரும் இங்கி­ருந்து நியூசிலாந்துக்குச் செல்லும் சிங்கப்பூரர்களும் நாளையிலிருந்து தானியக்க முறையில் குடிநுழைவு அனுமதி­யைப் பெற்றுக்கொள்ளலாம். நியூசிலாந்து கடப்பிதழ் வைத்து இருக்கும் ஆறு வயதுக்கு மேற்­பட்டோர், கடந்த ஈராண்டு­களில் இரண்டு முறையாவது சிங்கப்பூ­ருக்குப் பயணம் செய்து இருந்தால், அடிக்கடி சிங்கப்பூ­ருக்குப் பயணம் செய்யும் திட்டத்­தில் சேர்ந்து­ கொள்ளலாம். அவர்களுடைய கடப்பிதழ், குறைந்தது ஆறு மாதங்களுக்குச் செல்லுபடியாகும் நிலையில் இருக்க வேண்டும். அதேபோல சிங்கப்பூரர்கள் நியூசிலாந்தில் உள்ள தானியக்க குடிநுழைவு முறையைப் பயன்­படுத்தி அந்த நாட்டுக்குள் எளிமை­ யாகச் செல்லவும் அனுமதி கிடைக்கும்.