தேசிய சேவையாற்ற தவறிய இளையருக்கு சிறை

சுகாதாரப் பிரச்சினைகள் உடைய இளையர் ஒருவர், தேசிய சேவை­யின்போது தமக்கு காயம் ஏற்பட்டு­விடுமோ என்ற பயத்தின் காரண­மாக 2014ஆம் ஆண்டில் சிங்கப்­பூரைவிட்டு வெளியேறினார்.

ஆஸ்திரேலியாவில் இளநிலைப் பட்டக்கல்வியை முடித்தவுடன் சிங்கப்பூரரான சலெய் செங் ஸி சியோங், தமது தந்தைக்குப் புற்று­நோய் ஏற்பட்டதையடுத்து 2017­ ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி சிங்கப்பூர் திரும்பினார்.

தேசிய சேவை ஆற்ற தமக்கு விருப்பமில்லை என்று அவர் முன்னதாக பெற்றோரிடம் கூறி இருந்தார். செங்கிற்கு ஏற்பட்ட சுகா­தாரப் பிரச்சினை குறித்த மேல் விவ­ரங்கள் நீதிமன்ற ஆவ­ணங்­களில் குறிப்பிடப்படவில்லை.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக உரிய அனுமதியின்றி சிங்கப்பூரைவிட்டு விலகி இருந்த­தாக குற்றத்தை ஒப்புக்­கொண்ட 25 வயது செங்கிற்கு நேற்று ஏழு வாரச் சிறைத் தண்டனை விதிக்­கப்பட்டது. சிங்கப்பூர் ஆயுதப் படையில் செங் தற்போது தேசிய சேவையை ஆற்றி வருகிறார். 

கடந்த ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி அவர் தேசிய சேவையை ஆற்றத் தொடங்கினார்.