பழுதடைந்த தாழ்ப்பாழால் பல மணி நேரம் திறந்திருந்த அஞ்சல் பெட்டிகள்

பிடோக் ரெசர்வோர் ரோட்டிலுள்ள புளோக் 621ல் அஞ்சல் பெட்டிகள் பல, பழுதடைந்த தாழ்ப்பாழ் ஒன்றின் காரணமாகப் பல மணி நேரத்திற்குத் திறந்தே இருந்தன.அஞ்சலை எடுக்க அங்குச் சென்றிருந்த வட்டாரவாசிகள், அஞ்சல் பெட்டிகள் திறந்திருந்ததைக் கண்டதை அடுத்து ‘சிங்போஸ்ட்’ அஞ்சல் சேவை நிறுவனத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உதவிக்கான அழைப்பு பிப்ரவரி 8ஆம் தேதி இரவு 8.20 மணிக்குக் கிடைத்ததாக ‘சிங்போஸ்ட்’ தெரிவித்தது. ‘சிங்போஸ்ட்’ நிறுவன அதிகாரி ஒருவர் இரவு 9 மணிக்குள் அந்த அஞ்சல் பெட்டிகளைச் சோதனை செய்து தற்காலிகமாகச் சில பழுதுபார்ப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டார். பின்னர், தாழ்ப்பாழைச் சரிசெய்ய மற்றொரு குழு அனுப்பப்பட்டதாகவும் ‘சிங்போஸ்ட்’ கூறியது.

இதுபோன்ற பிரச்சனைகளுக்குப் பொதுமக்கள் 1605 என்ற தொலைபேசி எண்ணின் வழியாகத் தங்களை நாடலாம் என்று ‘சிங்போஸ்ட்’ நிறுவனம் கூறியது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

புதிய மின்னியல் சாலைக் கட்டண முறை அடுத்த ஆண்டிலிருந்து தயாராகும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Jun 2019

அடுத்த ஆண்டு முதல் புதிய மின்னியல் சாலைக் கட்டணம்; வாகனங்களுக்குள் உள்ள சாதனம் இலவசமாக மாற்றப்படும்

நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் லீ சியன் லூங். படம்: எஸ்பிஎச்

17 Jun 2019

புதிய பாணி பெருநாள் கொண்டாட்டம்