‘மலேசியாவுடன் சர்ச்சை, இணையத்தில் திடீரென அதிகரித்த குறைகூறல்கள்’

கடந்த ஆண்டு கடல் எல்லைப் பிரச்சினை, ஆகாய வெளி தொடர் பான விவகாரங்களில் சிங்கப்பூருக் கும் மலேசியாவுக்கும் இடையே பிணக்கு ஏற்பட்டபோது, சமூக ஊடகங்களில் சிங்கப்பூருக்கு எதி ரான கருத்துகள் திடீரென அதி கரித்ததாகவும் அவை பெயரில் லாத கணக்குகளிலிருந்து தெரி விக்கப்பட்டதையும்  சட்டத்துக்கான மூத்த துணை அமைச்சர் எட்வின் டோங் நேற்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் குறித்த விவகாரம் எழுந்தபோதும், சமூக ஊடகங்களில் பயனீட்டாளரின் முகத்தைக் காட்டாத கணக்கு களில் இருந்து, 40% கருத்துகள் கூறப்பட்டதாக அவர் சொன்னார்.
சிங்கப்பூரின் அரசியலில் இணைய இயக்கங்கள், போலி யான தகவல்கள் மூலம் வெளி நாட்டு சக்திகள் தலையிட முடியும் என்பதை இது காட்டுகிறது. 
இத்தகைய மிரட்டல்களை எதிர்கொள்ள இந்த ஆண்டில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.
சிங்கப்பூர் - கோலாலம்பூர் சர்ச்சைகளைப் பொருத்தவரையில், சந்தேகத்திற்குரிய அந்த சமூக ஊடகப் பக்கங்கள் எவருடையவை என்பது எங்களுக்குத் தெரியாது. அவை வெளிநாட்டினருடையதா என்பதும் தெரியாது. ஆனால், சிங்கப்பூரின் நிலையிலிருந்து மாறுபட்ட ஒரு செயற்கையான தோற்றத்தை இணையவாசி களுக்கு ஏற்படுத்த அவை முனைந்தன என்பது தெளிவானது என்று திரு டோங் கூறினார்.
சிங்கப்பூரில் வெளிநாட்டு சக்திகள் தலையிட்ட சம்பவங்கள் நடந்துள்ளதா என தெம்பனிஸ் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செங்  லீ ஹுய் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் லீ சியன் லூங்கிற்குப் பதிலாக திரு டோங் பதிலளித்தார்.