‘குடியிருப்பாளருக்கு பாதிப்பின்றி இறுதிச் சடங்கு கூட சேவை’

புக்கிட் பாத்தோக்கில் அமைய வுள்ள இறுதிச் சடங்கு கூடத்தின் செயல்பாட்டினால் குடியிருப்பாளர் களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு களைக் குறைக்க தகுந்த நட வடிக்கைகளை எடுப்பது அதன் நடத்துநரின் பொறுப்பு என்று சுற்றுப்புற நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். 
இறுதிச் சடங்கை அமைதியாக நடத்துவது, சுற்றுப்புறத்திற்கு கேடு விளைவிக்காத வகையில் புகை வெளியாவதைத் தடுப்பது ஆகியவை இதில் அடங்கும்.
மக்களுக்கு எவ்வித இடைஞ் சலும் ஏற்படாத வண்ணம் சடங்கு களும் இறுதி யாத்திரையும் முடிந்தவரை குறிப்பிட்ட இடத்துக் குள்ளேயே நடத்த வேண்டும் என்று திரு மசகோஸ் கூறினார்.
அந்த இறுதிச் சடங்கு கூடத் திற்கு புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 23ல் எந்த வகையில் இடம் தேர்வு செய்யப்பட்டது என்று புக்கிட் பாத்தோக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு முரளி பிள்ளை எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், இதனைக் கூறினார்.
மூப்படைந்து வரும் சிங்கப்பூர் மக்கள்தொகையால் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்திசெய்ய அடுத்த பத்தாண்டுகளில் திறக்கப் படவுள்ள அத்தகைய கூடங்களில் புக்கிட் பாத்தோக் இறுதிச் சடங்கு கூடமும் ஒன்று.