உந்து நடமாட்ட சாதன சட்டவிரோத பயன்பாடு: 600க்கும் மேற்பட்டோர் பிடிபட்டனர்

உந்து நடமாட்ட சாதனத்தை சாலைகளில் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதற்காகச் சென்ற ஆண்டு சராசரியாக மாதத்திற்கு 51 பேர் பிடிபட்டுள்ளனர். 
கடந்த 2017ஆம் ஆண்டின் முதல் 11 மாதத்தில் இந்த சராசரி எண்ணிக்கை 40ஆக இருந்தது. 
சென்ற ஆண்டில் பிடிபட்ட 616 பேரில் சுமார் 110 சம்பவங்கள், அதாவது 18 விழுக்காடு, தனியார் வீடமைப்புப் பேட்டைகளில் உள்ள சிறிய சாலைகளில் நடந்துள்ளன. 
பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் டென்னிஸ் டான் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு போக்குவரத்துக்கான மூத்த துணை அமைச்சர் டாக்டர் லாம் பின் மின் பதிலளித்தார். 
உந்து நடமாட்ட சாதனங்களைச் சாலைகளில் ஓட்டுவது சட்ட விரோதச் செயலாகும். சிறிய சாலைகளில் பயன்படுத்தி முதல் முறை பிடிபடுவோருக்கு $300 அபராதமும் பிரதான சாலைகளில் பயன்படுத்துவோருக்கு $500 அபராதமும் விதிக்கப்படும்.
போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளிலும் பொதுமக்கள் புகார் செய்யும் இடங்களிலும் நிலப் போக்குவரத்து ஆணையம் கூடுதல் அமலாக்க நடவடிக்கை களை மேற்கொள்கிறது என்றார் மூத்த துணை அமைச்சர். 
உந்து நடமாட்ட சாதனங்களைப் பயன்படுத்துவோர் பாதசாரிகள் மீது மோதி விபத்து நேர்ந்தால் இரு சாராரும் சிங்கப்பூர் சமரச மையத்திற்கோ சிங்கப்பூர் வழக் கறிஞர் சங்கத்திற்கோ சமரச பேச்சுவார்த்தைக்குச் செல்லலாம். 
ஆனால் இரு அமைப்புகளும் இதுவரை இதன் அடிப்படையிலான சம்பவங்களைக் கையாளவில்லை என்று திருவாட்டி லீ பீ வாவின் கேள்விக்கு டாக்டர் லாம் பதிலளித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உச்ச நேரங்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க விரும்பி கடற்பாலத்தில் நடந்து செல்பவர்களின் பாதுகாப்புக்காக நடைபாதை தேவைப்படுகிறது. படம்: சாவ்பாவ்

19 Jun 2019

கடற்பாலத்தில் நடைபாதை கட்ட ஜோகூர் திட்டம்

சிங்கப்பூரிலுள்ள 16 நகர மன்றங்களும் புதிய ஆளுமை முறைமைக்கு உட்பட்டுச் செயல்படவேண்டும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Jun 2019

நகர மன்றங்களுக்குப் புதிய ஆளுமை முறைமை

ஜூரோங் தீவில் உள்ள இவோனிக் நிறுவனத்தின் இரண்டாவது ஆலை நேற்று தனது செயல்பாட்டை தொடங்கியது. படம்: இவோனிக்

19 Jun 2019

சிங்கப்பூரில் $768 மி. செலவில்  ‘இவோனிக்’கின் 2வதுநிறுவனம்