ஈஸ்வரன்: பொதுத் துறை  தரவுப் பாதுகாப்பில் உயர்தரம்

தரவுகளை நிர்வகிப்பதில் தனியார் துறைக்குள்ள அதே கடுமையான விதிமுறைகள் பொதுத் துறைக்கும் உண்டு என்று தகவல் தொடர்பு அமைச்சர் எஸ் ஈஸ்வரன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித் துள்ளார்.
“இதை நாம் செய்ய வேண்டும், இல்லையெனில், அறிவார்ந்த தேச மாகும் அல்லது சிறந்த பொதுச் சேவையை வழங்க மின்னிலக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முயற்சிகள் வீணாகும்,” என்றார் அமைச்சர்.
பொதுத் துறையில் தரவு பாது காப்பில் ஏற்படும் மீறல்கள் கடுமை யானது என்பதால், தனியார் தரவு பாதுகாப்புச் சட்டத்தில் பொதுத் துறைக்கு வழங்கப்படும் விலக்கு களை நீக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட வேண்டுமா என்று அல்ஜுனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சில்வியா லிம் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
2012ஆம் ஆண்டில் நடப்புக்கு வந்த தனியார் தரவு பாதுகாப்புச் சட்டம், தனியார் துறையில் தரவுப் பாதுகாப்புக் குறித்து ஒரு குறிப் பிட்ட  தரநிலையைக் கொண்டுள் ளது. இது தனிப்பட்ட தரவுகளை நியாயமான காரணங்களுக்காகப் பயன்படுத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள செயிண்ட் அந்தோணியர் தேவாலயத்திற்கு வெளியே நிற்கும் கிறிஸ்தவ மதபோதகர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

21 Apr 2019

'சமூகங்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்ட இலக்கு’

ஆர்ச்சர்ட் ரோடு நடைபாதையில் மஞ்சள் சட்டை அணிந்த சிறுவன் மீது மின்-ஸ்கூட்டர் இடித்துவிட்டது. இதனால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்தார். படம்: ஃபேஸ்புக் (அண்டி யூவ் மாய்)

21 Apr 2019

ஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை 

மத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து பெண் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம்: வாசகர்

21 Apr 2019

நான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது