இருநூறாண்டு நிறைவில் பெண்களின் பங்களிப்பு

சிங்கப்பூரின் இருநூறாண்டு நிறைவின் ஒரு பகுதியாக, நாட்டிற்கு முக்கிய பங்காற்றிய மாதர் குழுக்களைப் பற்றி எடுத்துக்கூறும் வகையில்
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம் உட்பட 270 சமூக அமைப்புகளுடன் இணைந்து இருநூற்றாண்டு அலுவலகம் செயலாற்றும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் குமாரி இந்திராணி ராஜா தெரிவித்தார்.
சிங்கப்பூரின் நீண்ட வரலாற்றை நினைவுகூர இருநூறாண்டு நிறைவு ஒரு வாய்ப்பு என்று அமைச்சர் இந்திராணி நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.