பேருந்து, ரயில் சேவைகளில் பயணிகள் திருப்தி

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொதுப் போக்குவரத்து மன்றம் வழிநடத்திய பயணிகளின் மனநிறைவு ஆய்வின்படி, 2018ஆம் ஆண்டில் பயணிகள் பொதுப் போக்குவரத்து மீது அதிக திருப்தி அடைந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த ஆய்வு நடந்தது. 2017ஆம் ஆண்டில் 10 புள்ளிகளில் 7.7ஆக இருந்த திருப்தி மதிப்பீட்டு அளவு, 2018ஆம் ஆண்டில் 7.9ஆக உயர்ந்துள்ளது. 2014ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆய்வில் பங்கேற்ற 5,000 பேரில், 77.8 விழுக்காட்டினர் பேருந்து சேவைகள் முன்னேறியுள்ளதாகத் தெரிவித்தனர். 2017ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 80.8% ஆக இருந்தது.

அதுபோக 72.1 விழுக்காட்டினர் ரயில் சேவைகள் முன்னேறியுள்ளதாகக் குறிப்பிட்டனர். இத்தொகை பெரும் அளவில் அதிகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 50.3% ஆக இருந்தது.