பிப்ரவரி 15ல் முழுமைத் தற்காப்பு ‘முக்கிய தகவல்’ சமிக்ஞை ஒலிக்கும்

முழுமைத் தற்காப்பு தினமான வெள்ளிக்கிழமையன்று ‘முக்கிய தகவல்’ சமிக்ஞை ஒலியை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஒலிக்கச் செய்யும்.

அன்றைய தினம் மாலை 6.20 மணிக்கு சமிக்ஞை ஒலிக்கும். ஒரு நிமிடம் ஒலிக்கும் அந்தச் சமிக்ஞையால் எவரும் பீதி அடைய வேண்டாம் என்று படை கேட்டுக் கொண்டது.

1942ஆம் ஆண்டு ஜப்பானியப் படைகளிடம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சரணடைந்த தருணத்தைக் குறிக்கவே பிப்ரவரி 15ஆம் தேதி மாலை 6.20 மணிக்குச் சமிக்ஞை ஒலிக்கும்.

வரலாற்றில் நடந்த அந்த முக்கிய சம்பவத்தை அறிந்து அவசரக் காலத்திற்குத் தயார் நிலையில் இருப்பதன் அவசியத்தையும் தாய்நாட்டை தற்காப்பதன் அவசியம் பற்றியும் அனைவரும் அறியவேண்டும் என்று படை கூறியது.