‘புரோச்செஸின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை, ஆதாரமற்றவை’

எச்ஐவியால் பாதிக்கப்பட்டோர் குறித்த தகவல்களை இணையத்தில் வெளியிட்ட அமெரிக்கர் மிக்கி ஃபரேரா புரோச்செஸ் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் யாக இருக்கலாம் அல்லது ஆதாரமற்ற தாக இருக்கலாம் எனக் கூறி, அரசாங்கம் அவற்றை மறுத்துள்ளது.
அதிலும் குறிப்பாக, போலிஸ் காவலில் இருந்தபோது தான் துன்புறுத்தப்பட்டதாகவும்  பாலியல் சித்திரவதைக்கு ஆளானதாகவும் சிறையில் இருந்தபோதே தனக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டதாகவும் அதற்காக சிறையில் தனக்கு மருத்துவச் சிகிச்சை மறுக்கப்பட்டதாகவும் புரோச்செஸ் கூறு வதில் உண்மையில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், எச்ஐவி பதிவகத் தகவல் களைத் தான் வெளியிடவில்லை, இன்னொ ருவரே அதை வெளியிட்டார் என்று அவர் கூறியிருப்பதையும் அமைச்சு நிராகரித்தது.
சிறைத்தண்டனை முடிந்து கடந்த ஆண்டு அமெரிக்காவிற்குத் திருப்பியனுப்பப் பட்ட புரோச்செஸ், நேற்று பல ஃபேஸ்புக் பதிவுகள் மூலம் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து போலிசும் தானும் முழுமையான விசாரணையை மேற் கொண்டதாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
இந்த நிலையில், சிங்கப்பூர் போலிஸ் படையும் சிறைத்துறையும் புரோச்செஸ் முன் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு நேற்று கூட்ட றிக்கை மூலம் விளக்கமளித்தன.
ஸக்காரி லெவின் என்பவரே எச்ஐவி பதிவகத் தகவல்களைக் கசியவிட்டதாக புரோச்செஸ் கூறியிருந்தார்.
ஆனால், 2016லும் அவர் இதேபோன்ற குற்றச்சாட்டுகளை எழுப்பியதாகவும் அதைத் தொடர்ந்து லெவினை போலிசார் விசாரித் ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
போலிசின் உள்துறை விவகார அலுவல கத்தில் வைத்து புரோச்செஸ் விசாரிக்கப் பட்டதால் போலிஸ் விசாரணையின்போது துன்புறுத்தப்பட்டதாக அவர் கூறியிருப்பதில் உண்மையில்லை எனக் கண்டுபிடிக்கப்பட்ட தாக அந்த அறிக்கை கூறியது.