மூத்தோர் துடிப்பான முறையில் மூப்படைந்து, சிறந்த ஆரோக்கியத்தைப் பேணி, அவர்களுக்கு பராமரிப்பை வழங்க அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை எடுக்கும் என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் (படம்) நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இலக்குடன் மூப்படைவதும் பராமரிப்பாளர்களுக்கான ஆதரவும் பற்றிய செயல்திட்டத்தை ஒட்டி நாடாளுமன்றத்தில் பல உறுப்பினர்கள் விவாதித்து பல்வேறு கருத்துகளை முன்வைத் தனர். விவாதத்தை நிறைவுசெய்து பேசிய டாக்டர் கோர், ஆரோக்கியமான ஆயுட்காலத்தைப் பெற்றிருப் பதில் ஜப்பானியர்களுக்கு அடுத்ததாக சிங்கப்பூரர்கள் இரண்டாவது நிலையில் இருப்பதாக சொன்னார். சிங்கப்பூரர்கள் அவர்களது வயதான காலத்தை தன்னம்பிக்கையுடனும் பரிவுடனும் கழிக்க மூன்று அம்சங்களில் அவர்களுக்கு சக்தியளிக்க சுகாதார அமைச்சு முயற்சி எடுத்து வருவதாக அவர் சொன்னார்.
ஆரோக்கியமான நீண்ட வாழ்க்கைக்கான திட்டங்கள்
1 mins read

