உலகளவில் சிங்கப்பூர் மீதான கவனம் அதிகரித்ததைத் தொடர்ந்து சுற்றுப்பயணிகளின் வருகையும் அவர்கள் செலவிட்ட பணமதிப்பும் சென்ற ஆண்டு அதிக அளவிற்கு உயர்ந்து உள்ளது. பயணிகளின் மொத்த வருகை 6.2 விழுக்காடு உயர்ந்து 18.5 மில்லியனாக பதிவானது. முன்னுரைக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அது கணி சமாக அதிகம். சீனா, இந்தியா, மலேசியா ஆகியவற்றில் இருந்து வந்த அதிகமான பயணிகளின் எண்ணிக்கை அதற்கு உதவி யது. அவர்கள் செலவு செய்த மொத்த தொகை 1 விழுக்காடு உயர்ந்து $27.1 பில்லியனாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தத் தொடக்க மதிப்பீடுகளை சிங்கப்பூர் பயணத்துறை வாரியம் நேற்று வெளியிட்டது. உலகின் கவனம் சிங்கப்பூர் மீது ஈர்க்கப்படுவதற்கு இரண்டு முக்கிய அம்சங்கள் அடையாளம் காணப்பட்டன.
பயணிகளின் வருகை 2018ல் புதிய உச்சத்தை எட்டியது
1 mins read

