மசகோஸ்: உணவுப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய அமைப்பு

உணவு பெறுவதற்கான மூன்று தேசிய உத்திகளை உருவாக்குவதன் மூலம் சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்பை புதிய அமைப்பு ஒன்று உறுதிசெய்யும் என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிங்கப்பூர் உணவு அமைப்பின் முன்னுரிமையை அவர் பட்டியலிட்டார். உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய எப்ரல் 1ஆம் தேதி அந்த அமைப்பு அமைக்கப்படும்.
சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்பிற்கு உணவுப் பாதுகாப்பு அடித்தளமானது என்ற திரு மசகோஸ், உணவுக்காக சிங்கப்பூர் ஒரே நாட்டை அதிகப்படியாக சார்ந்திருக்கக்கூடாது என்றார்.
முட்டை, குறிப்பிட்ட சில வகை கடல் உணவு ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்துவது அல்லது நிறுத்துவது குறித்து பரிசீலிப்பதாக கடந்த டிசம்பரில் மலேசியா அறிவித்ததை அவர் நினைவுகூர்ந்தார்.