சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள்

சிங்கப்பூரின் பொதுப் போக்கு­வரத்து வசதிகள் மீது பயங்கர­வாதத் தாக்குதல் மேற்கொள்ளப்­படும் சாத்தியத்தை நிராகரிக்க முடியாது என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி நேற்று நாடாளுமன்­றத்தில் கூறினார்.
பொதுப் போக்குவரத்துக் கட்ட­மைப்பு தாக்கப்படுவது பற்றிய தகவல் ஏதும் இல்லை என்றாலும், பயங்கரவாத அச்சு­றுத்தல் தொடர்­கிறது என்றார் அவர்.
பொதுப் போக்குவரத்தில் பாது­காப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் அவசரகால தயார்­நிலையை வலுப்படுத்தவும் அதி­ காரிகள் தொடர்ந்து பணியாற்றி வருவதாக டாக்டர் ஜனில் சொன்னார்.
“அதிகமானோர் காயமடைய, அல்லது இறக்கக்கூடிய சாத்தியம் இருப்பதால் பொதுப் போக்குவரத்து வசதிகள் பயங்கரவாத தாக்கு­தலுக்கு இலக்காக உள்ளன,” என்ற அவர், உலகளவில் கடந்த இரு ஆண்டுகளில் பயணிகள், ரயில்கள் மீது தாக்குதல் அரங்­கேற்றப்பட்டதைச் சுட்டினார்.