மூதாட்டியிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறித்த ஆடவர் கைது

வழிப்பறித் திருட்டில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 56 வயது ஆடவர் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 12) கைது செய்யப்பட்டார்.

அங் மோ கியோ அவென்யூ 5ல் 76 வயது மூதாட்டி ஒருவரிடமிருந்து அந்த ஆடவர் தங்கச் சங்கிலியைப் பறித்து மாயமானதாக போலிசாரிடம் பிற்பகல் 2.40 மணிக்குப் புகார் செய்யப்பட்டது. 

அங் மோ கியோ போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணையின் மூலமாகவும், கண்காணிப்புக் கேமராக்களின் துணையுடனும் அந்த ஆடவரை மறுநாளே கைது செய்தனர். அங் மோ கியோ அவென்யூ 6ல் அவர் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்குக் கைதானார்.

வழிப்பறி திருட்டுக்கான குற்றம் நிரூபனமானால் அவருக்கு ஓராண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.