சிங்கப்பூரின் மத்திய பகுதியில் மின்சாரத் தடை

சிங்கப்பூரின் மத்திய பகுதியில் இன்று பிற்பகல் மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டது. 

பாதிக்கப்பட்ட இடங்களில் பெரும்பகுதி வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளதாக எஸ்பி குழுமம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அதிகாரிகள் உடனே அனுப்பப்பட்டதாகவும் எஸ்பி குழுமம் கூறியது.  

நடந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக எஸ்பி குழுமம் தெரிவித்தது.

வடக்கு-கிழக்கு ரயில் பாதையில் மின்சாரத் தடையால் ஏழு ரயில் நிலையங்கள் பாதிக்கப்பட்டதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் தெரிவித்தது.