மியுனிக் பாதுகாப்பு மாநாட்டில் தற்காப்பு அமைச்சர் இங் உரையாற்றுகிறார்

ஜெர்மனிக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ள தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் இன்று முதல் 18ஆம் தேதி வரை அங்கிருப்பார். நாளை மியுனிக் நகரில் நடைபெறவிருக்கும் 55வது மியுனிக் பாதுகாப்பு மாநாட்டில் அவர் ‘பிரச்சினைக்குரிய கடற்பகுதிகளை இணைத்தல் - முரண்பாடற்ற தென்சீனக் கடல் சச்சரவுகள்’ எனும் தலைப் பில் உரையாற்றுவார்.
மியுனிக்கில் அவர் மற்ற நாடுகளின் தற்காப்பு அமைச்சர் களுடனும் பேச்சு நடத்துவார். மியுனிக் பாதுகாப்பு மாநாட் டுக்குப் பிறகு டாக்டர் இங், இம்மாதம் 18ஆம் தேதியன்று ‘கீல்’ நகரில் சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் முதலாவது ரக 218SG நீர்மூழ்கிக் கப்பலின் செயலாக்கத்தைத் தொடங்கி வைப்பார்.

Loading...
Load next