மின்னிலக்கத் தற்காப்பு 6வது தூண்: அமைச்சர் 

இணையப் பாதுகாப்பின் அவ சியத்தை வலியுறுத்தும் வகையில் தேசிய தற்காப்பு முறையான முழுமைத் தற்காப்பில் மின்னி லக்கத் தற்காப்பும் 6வது தூணாக சேர்க்கப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் இங் ஹெங்  ஹென் நேற்று அறிவித்தார்.
முழுமைத் தற்காப்பு 35 ஆண்டுகளுக்கு முன்பு தொடங் கப்பட்டது.
அதன் பிறகு முதல் முறையாக மற்றொரு தற்காப்பு தூண் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
வருடாந்திர முழுமைத் தற் காப்பு தினத்தையொட்டி பேசிய டாக்டர் இங், இணையப் பாது காப்பு மிரட்டலும் அரைகுறையான தகவல்களும் சிங்கப்பூருக்கு ஆபத்தாக விளங்குகின்றன என்று குறிப்பிட்டார்.
இதனால் மிகவும் விழிப்புடன் இருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தீங்கு விளைவிக்கும் மென் பொருள்கள் நம்முடையை கணினி கட்டமைப்புகளை முடக்க முடியும். போலிச் செய்திகள், இனக்கலவரத்தை மூட்டி நம்மிடையே பிளவை ஏற்படுத்த முடியும் என்று அமைச்சர் எச்சரித்தார்.