‘மேட் இன் சிங்கப்பூர்’ வாகனம்

‘மேட் இன் சிங்கப்பூர்’ பெயர் பொறிக்கப்பட்டு ஓட்டுநர் இல்லா வாகனங்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்யும் சாத்தியம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப் பூருக்கு இல்லாமல் போயிருக் கலாம்.
ஆனால் அதெல்லாம் கடந்த காலமாகி விட்டது.
தற்போது தானாக இயங்கும் வாகனங்கள் அனைத்தையும் சிங் கப்பூரிலேயே தயாரிக்கும் சூழ் நிலை உருவாகியுள்ளது. 
இதற்கு தலைமையேற்று வழி நடத்த பொருளியல் மேம்பாட்டுக் கழகம் ஆயத்தமாகி வருகிறது.
சிங்கப்பூரிலேயே தானாக இயங்கும் வாகனம், விவேக நட மாட்டச் சாதனங்களை தயாரித்து வெளியிடுவதற்கான முதலீடுகளை ஈர்க்க கழகம் பல்வேறு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரபல ‘டைசன்’ நிறு வனம் அண்மையில் தனது முதல் மின்சார வாகனத் தொழிற் சாலையை சிங்கப்பூரில் தொடங்கப் போவதாக அறிவித்திருந்தது.
“தொழில்நுட்பம் புதிய வாய்ப்பு களுக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளது,” என்று பொருளியல் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் சிங் காய் ஃபோங் தெரிவித்தார்.
 

Loading...
Load next