$10,000க்கு மேல் லஞ்சம் வாங்கியவருக்குச் சிறை

பாரம் தூக்கும் இயந்திரத்தை ஓட்டிய சாவ் யுசுன் , 43, சரக்கு வண்டி ஓட்டுநர் களிடமிருந்து $10,000க்கும் மேல் லஞ்சம் வாங்கியிருந்ததன் தொடர்பில் நேற்று நான்கு மாத சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. அத்துடன் $10,863 அபராதத் தொகையையும் கட்ட அவருக்கு உத்தரவு இடப்பட் டது.
ஊழல் தொடர்பில் ஒரு குற் றச்சாட்டை நேற்று ஒப்புக் கொண்ட சாவ், அபராதத் தொகையைக் கட்ட இயலாவிட் டால் மேலும் இரு வாரங்கள் அவரது சிறைத் தண்டனையில் சேர்க்கப்படும்.
சரக்கு வண்டி ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களில் இணைத்துக்கொள்ளும் கொள் கலன்களைப் பெற்றுக்கொள் ளும்போதும் திரும்பத் தரும் போதும் வரிசை பிடித்துக் காத்திருப்பர். அப்போது அந்த வரிசையில் முறை தவறி முன் னுக்கு வருவதற்காக அவர் களிடமிருந்து சாவ் லஞ்சம் வாங்கினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் இவ்வாறு செய்து வந் ததாகத் தெரிவிக்கப்பட்டது.
லஞ்சம் தராத ஓட்டுநர்கள் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.