2040க்குள் மேம்பட்ட நிலப் போக்குவரத்து

2040க்குள் மேம்பட்ட நிலப் போக்குவரத்து

2 mins read

நாட்டின் போக்குவரத்தில் மேலும் துரிதம், பாதுகாப்பு, அனைவரையும் உள்ளடக்கும் அமைப்பு இருக்க வேண்டும் என்று 2040ஆம் ஆண்டின் போக்குவரத்து பெருந் திட்டம் தொடர்பில் ஆலோசனைக் குழு பரிந்துரைகளைச் சமர்ப்பித்து உள்ளது. போக்குவரத்து, தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி தலை மையில் செயல்பட்ட ஆலோசனைக் குழு நேற்று அரசாங்கத்திடம் ஒன்பது பரிந்துரைகளை முன்வைத் தன. பயணிகள், போக்குவரத்து ஊழியர்கள், துறைப் பிரதிநிதிகள், கல்விமான்கள் என பொதுமக் களின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடமிருந்து கடந்த ஆறு மாதங்களாகத் திரட்டப்பட்ட 7,400க்கும் மேற்பட்ட கருத்து சேகரிப்பிலிருந்து இப்பரிந்துரைகள் வகுக்கப்பட்டன. இந்நிலப் போக்குவரத்து பெருந் திட்டத்திற்கான பரிந்துரைகள் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளன. முதல் பெரும் பிரிவின் கீழ் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போது மிதிவண்டி ஓட்டு வது, டாக்சியில் செல்வது போன்ற பயணங்களும் வசதியாக இருக்க வேண்டும். 90 விழுக்காட்டு உச்ச நேரப் பயணங்கள் இவை போன்ற தெரிவுகள் மூலம் மேற்கொள்ளப் படவேண்டும். பொதுப் போக்குவரத்து, தனி நடமாட்டக் கட்டமைப்பு ஆகிய வற்றில் செய்யப்படும் முதலீட்டால் அருகிலுள்ள சுற்று வட்டாரத்திற்குச் செல்ல 20 நிமிடங்களுக்கு மேல் எடுக்கக்கூடாது. அத்துடன் 90 விழுக்காட்டு உச்ச நேரப் பயணங் கள் 45 நிமிடங்களுக்கு மேல் போகாது என ஆலோசனைக்குழு கூறியது. மூப்படையும் சமூகத்தினர், உடற்குறையுள்ளோர், இளம் பிள்ளைகள் கொண்ட குடும்பங்கள் ஆகியோரின் தேவைகளை மேலும் சிறந்த முறையில் பூர்த்தி செய்யும் போக்குவரத்தை உருவாக்குவது அடுத்த பிரிவில் அடங்கும். இது பயணிகள், போக்குவரத்து நிறுவனங்கள், அரசாங்கம் ஆகிய வற்றின் கூட் முயற்சியாக இருக்கவேண்டும்.