தர்மன்: பெற்றோரின் பிள்ளை வளர்ப்பு முறை மாறவேண்டும்

கல்வி முறையை விரிவுபடுத்து வதில் நாடு ஈடுபட்டுவர பெற் றோரின் பிள்ளை வளர்ப்பு முறை யும் அதற்கேற்ப மாறவேண்டும் என்று நேற்று துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் கூறினார்.
நாட்டின் இன்றைய கல்வி நிலை, அதை மேம்படுத்துவதற் கான வழிகள் ஆகியவற்றின் தொடர்பில் ஹுவா சொங் கல்வி நிலையத்தில் நடைபெற்ற கல்வி மாநாட்டில் கிட்டத்தட்ட 600 கல் வியாளர்களிடம் அவர் இவ்வாறு பேசினார்.
“பிள்ளைகளிடத்தில் அதிக எதிர்பார்ப்புகளை முன்வைப்பது அவசியம். அதே சமயம் பிறர் உதவியின்றிச் சுயமாகச் சிந்திப் பதற்கும் சொந்த விருப்பங்களை வளர்த்துக்கொள்வதற்கும் தேவையான ஊக்கம் அளிப்பதும் முக்கியம்,” என்றார் அவர்.
இதன் தொடர்பில் ‘ஹெலிகாப்டர்’ வளர்ப்பு முறை பற்றி அமெரிக்காவின் ஆய்வு களைக்கொண்டு மேற்கோள் காட்டினார்.
இம்முறையின் கீழ் பெற்றோர் தேவையில்லாமல் பிள்ளைகளின் நடவடிக்கையில் தலையிடுவர். இதனால் பிள்ளைகளுக்கு உள வியல் ரீதியாக நீண்டகாலம் நீடிக்கக்கூடிய பக்கவிளைவுகள் ஏற்படும் என்று சுட்டினார்.