‘வீரர்களின் பாதுகாப்பையே முக்கியமாகக் கருதுகிறோம்’

தானும் சிங்கப்பூர் ஆயுதப் படையும் வீரர்களின் பாதுகாப்பை மிக முக் கியமானதாகக் கருதுவதாக பிரத மர் லீ சியன் லூங் கூறியிருக்கிறார்.
சிங்கப்பூர் ஆயுதப் படை பயிற்சியின்போது அண்மையில் சேவையாளர்கள் மரணம் அடைந்த தன் தொடர்பில் முதன்முதலாக கருத்துக் கூறிய திரு லீ இவ்வாறு குறிப்பிட்டார்.
"அண்மையில் நிகழ்ந்த ஆயு தப் படை சம்பவங்கள் மிகவும் வலி தருவதாக இருக்கின்றன. காரணம், விலை மதிப்பில்லாத உயிர்கள் பலியாகி இருக்கின்றன.
"இது நம் அனைவருக்கும் குறிப்பாக அந்தச் சேவையாளர் களின் குடும்பங்களுக்கு எந்த அளவுக்கு அதிர்ச்சியையும் கவ லையையும் ஏற்படுத்தி இருக்கும் என்பது எனக்குத் தெரியும்," என்று திரு லீ நேற்று ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.
முழுமைத் தற்காப்புத் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
பாதுகாப்புமிக்க பயிற்சிக்கு சிங்கப்பூர் ஆயுதப்படை ஏராள மான முக்கியத்துவத்தை அளிப்ப தாகவும் நூற்றுக்கு நூறு உயிருடற்சேதம் இல்லாத நிலையை நிலைப்படுத்துவதே ஆயுதப் படை யின் இலக்கு என்றும் திரு லீ குறிப்பிட்டார்.
பயிற்சியில் காயம் அடைந்தவர் கள் தலைசிறந்த மருத்துவப் பராமரிப்பைப் பெறுவதையும் ஆயுதப் படை உறுதிப்படுத்துகிறது என்று பிரதமர் லீ தெரிவித்தார்.
படைவீரர் மரணம் அடையும் போது சிங்கப்பூர் ஆயுதப் படை மிகவும் வருந்துகிறது என்று திரு லீ ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டார்.
"அத்தகைய சம்பவம் பற்றி ஆயுதப் படை ஏககாலத்தில் புலன் விசாரணை நடத்தி அந்தச் சம் பவத்திற்கான காரணங்களை அடையாளம் காணுகிறது. தன் னுடைய பயிற்சியையும் நடை முறைகளையும் ஆயுதப் படை மேம் படுத்துகிறது.
"அறவே உயிருடற் சேதம் இல்லாத நிலையைச் சாதிப்பது என்பது மிக மிகக் கடினமான ஒன்று. இருந்தாலும் அத்தகைய நிலையைச் சாதிக்க நாம் இன் னமும் பாடுபடுகிறோம்.
"ஒவ்வோர் உயிரும் நமக்கு விலைமதிப்பில்லாத ஒன்று என் பதே இதற்கான காரணம்," என்று திரு லீ குறிப்பிட்டார்.
முன்னாள் பிரிகேடியர் ஜெனர லான பிரதமர் திரு லீ, சொந்த அனுபவத்திலிருந்து பலவற்றை யும் தான் தெரிவிப்பதாகக் குறிப் பிட்டார். திரு லீ, ஒரு படைப் பிரிவின் தலைவராக இருந்தார். பிறகு ஜெனரல் ஸ்டாஃப் பணியில் அவர் சேவையாற்றினார்.
பிரதமர் என்ற முறையில் தற்காப்பு அமைச்சு ஆற்றல்மிகு தலைவர்களைப் பெற்று இருக்கிறது என்பதைத் தான் உறுதிப்படுத்தி இருப்பதாக திரு லீ குறிப்பிட்டார்.
பயிற்சி விபத்து நிகழும்போது அரசாங்கம் குடும்பத்திற்கு மட்டு மின்றி தேசிய சேவையாளர்கள் அனைவருக்கும் பொதுமக்களுக் கும் பதிலளிக்கிறது என்று திரு லீ தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!