ஐஎஸ் போராளிக்குப் பணம் கொடுத்த சிங்கப்பூரர் கைது 

சமய தீவிரவாத மனப்போக்கைக் கொண்ட இரு சிங்கப்பூரர்கள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத் தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மலேசியாவின் ஜோகூரை தளமாகக் கொண்டு செயல்பட்டு வந்தார். 
சிரியாவில் செயல்படும் மலேசியாவின் ஐஎஸ் பயங்கர வாதிகளுக்கு அவர் ஆதரவு அளித்து வந்தார். 
முகம்மது கசாலி சாலே, 48, என்ற தொழிலதிபருக்கும் சிங் கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் அவருடைய நண்ப ரான ஹாசிம் ‌ஷியாமி மஹ்ஃபூட், 28, என்பவருக்கும் சென்ற மாதம் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சு நேற்று அறிவித்தது. 
மலேசியாவின் ஜோகூர், சிலாங்கூர், சாபா ஆகிய மாநிலங்களில் கடந்த இரண்டு மாதங்களில் தாங்கள் மேற் கொண்ட நடவடிக்கைகளில் கசாலியும் இதர ஐந்து பேரும் கைது செய்யப்பட்டதாக அரச மலேசிய போலிஸ் அறிவித்தது. 
தீவிரவாத குழுக்களில் ஈடு பாடு கொண்டிருந்ததற்காக அவர்கள் பிடிபட்டனர். மத்திய கிழக்கு நாடுகளில் ஐஎஸ் அமைப்பு ஏறக்குறைய முடங்கி விட்டது. ஈராக்குடன் கூடிய சிரியா எல்லை அருகே 1 சதுர கி.மீ. பரப்பளவுக்கான இடத்தைத் தற்காக்க சில நூறு பேர்தான் இன்னமும் அங்கு போராடி வரு கிறார்கள். அந்தப் போராளிகளில் பெரும்பாலானவர்கள் வெளி நாட் டினர். இத்தகைய ஒரு சூழலில் பயங்கரவாத தொடர்புடைய நபர் கள் இங்கு கைதாகி உள்ளனர். 
ஐஎஸ் அமைப்பு முடங்கிய போதிலும் அதனுடைய தீவிரவாத சித்தாந்தம் இன்னமும் சூடு தணியாமலேயே இருக்கிறது என்று பாதுகாப்பு அதிகாரிகள் கவலைப்படுகிறார்கள்.
ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து மத்திய கிழக்கில் போராடிவிட்டு வெளிநாட்டு போராளிகள் தங் கள் நாடுகளுக்குத் திரும்பு கிறார்கள் என்பதால் அந்தச் சித் தாந்தம் தொடர்ந்து பரவி வரும் என்றும் அதிகாரிகள் கவலைப் படுகிறார்கள். 
அத்தகைய போராளிகள் தென்கிழக்கு ஆசியாவிற்கும் வேறு இடங்களுக்கும் சமூக ஊடகங்கள் வழி தங்களுடைய போராட்டத்தை ஏற்றுமதி செய் கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. 
கசாலி, சிரியாவை தளமாகக் கொண்டு செயல்பட்ட ஐஎஸ் தீவிரவாதி வான் முகம்மது அக்வில் வான் சைனல் அபிதின் என்பவருடன் தீவிர தொடர்புடன் இருந்தார் என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது. 
சிங்கப்பூர் உள்நாட்டு பாது காப்புத் துறையுடன் மலேசிய போலிஸ் ஒத்துழைத்துச் செயல் பட்டதன் விளைவாக ஜோகூர் பாருவில் டிசம்பர் 19ஆம் தேதி கசாலி கைதானார்.  
ஜனவரி 7ஆம் தேதி அவர் சிங்கப்பூர் உள்நாட்டு பாது காப்புத் துறையிடம் ஒப்படைக்கப் பட்டார். 
கசாலி முதல்முதலாக அக் விலை 2009ல் சந்தித்தார். அக் விலின் தீவிரவாத கருத்துகளா லும் சதித்திட்ட கோட்பாடுகளா லும் கவரப்பட்டார். அக்வில் 2013ல் சிரியாவில் போராட போகவேண்டும் என்று முடிவு செய்தபோது கசாலி அவருக்குப் பணம் கொடுத்து உதவினார்.
சிரியாவில் அக்விலுடன் சேர்ந்துகொள்ளவும் கசாலி இணங்கினார். ஆனால்  மலேசி யாவை விட்டுச் செல்ல அவர் ஆயத்தமாக இல்லை என்பதால் அந்தத் திட்டத்தை அவர் நிறை வேற்றவில்லை. 
சிங்கப்பூரில் 2018 மே மாதம் கசாலியை ஹாசிம் சந்தித்ததாக வும் கசாலியின் தீவிரவாத கண் ணோட்டத்தினால் ஹாசிம் கவரப்பட்டார் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.  
 

Loading...
Load next